Skip Navigation LinksHome |MP3 Songs |Recent Songs
Recently Added Songs

பாடியவர் : லெ. சக்திகுமார்
Total No of Songs: 22
உமையவள் பாமாலை

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!


காப்பு

அண்டங்கள் ஏழினோ டேழும் அப் பாலுமாய்
ஆன எம் ஞான தேவா!
அறுகுடன் தும்பையும் ஆத்தியும் கொன்றையும்
அணிசெய்யும் அழகு மார்பா

எண்டிசை நடுங்கவே இறைவனார் தேரின் அச்(சு)
இற்றிடச் செய்த வீரா
இலகு புகழ் முனிசொல்ல உலகுபுகழ் பாரதம்
எழுதிடும் கவிதை நேசா!

தண்டையொடு கிண்கிணி சதங்கையும் கொஞ்சவே
சந்தடை கொள்ளும் பாதா!
சரவணன் அறுமுகன் மணமகன் ஆகவே
தண்ணளி புரிந்த ஈசா

தெண்டிரை சூழுலகில் தேவிராஜேஸ்வரியின்
தெய்வமாக் கருணை பாட
சித்தமிசை குடி கொண்ட தத்துவ விநாயகா
திருவருள் தந்து நீகா!

சிந்தூரம், குங்குமம், செவ்வானம், அவ்வானம்
திகழ வருகதிரின் உதயம்
தேசு மிகு மாணிக்கம், திரு ஏறு கமலம் அச்
செங்கமலம் அஞ்சு பவழம்

மந்தாரம் மழை நாளில் வரும் இந்தர கோபம் அவ்
வண்டூ ரும் மலையில் நறவம்
மான்மதம், செங்குருதி போன்மலரும் மாதுளம்
மாதுளம் சிதறும் முத்தம்

செந்தீயின் வண்ணம் என வேசொல்லு(ம்) மேனியும்
செப்பரிய அழகு வடிவும்
சிங்கா தனத்திலும் சிவனார் மனத்திலும்
சீர் கொண்டிலங்கும் எனினும்

எந்தாய்நின் பேர் சொல்லும் ஏழையேன் அறிவிலும்
என்றென்றும் திகழ அருள்வாய்!
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே! 1

தேறாத கவிஎனினும் மாறாத காதலால்
திரு முன்பு சாற்றுகின்றேன்!
சிந்தை அணு ஒவ்வொன்றும் தேவி உனதே ஆகச்
செய்ய தமிழ் பாடுகின்றேன்!

ஆறாத துயருக்கும் அகலாத கவலைக்கும்
ஆரை நான் நொந்து கொள்வேன்
அறியாது பிழை செய்து சரியாக வதைபட்ட
அவலத்தை எங்கு சொல்வேன்

நீறாக வேநிருதர் புரமூன்றும் செற்ற உனை
நெஞ்சாரப் போற்றுகின்றேன்
நெற்றிவிழியால் எனது குற்ற மலை பொடியாக
நின்னருளை வேண்டுகிறேன்!

ஈறேதும் இல்லாத இன்பவடிவாக என்
இதயதள மீதும் ஒளிர்வாய்!
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 2

சீரார் பெருந்துறையில் சிவயோக நாயகி
சிவகாமி தில்லை மன்றில்
தென்குமரி பகவதி திருவானைக்காவினில்
திகழும் அகிலாண்டேஸ்வரி

காரார் மதிற்கச்சி காமாட்சி, அங்கயற்
கண்ணி செந்தமிழ் மதுரையில்
கங்கைவள நாடுடைய நங்கை விசாலாட்சி
காளிவங் காள மண்ணில்

தாரார்சிவன் தோளும் தமிழும் விழைபவள்
சமயபுரம் அதனில் மாரி
தட்டாமல் கடவூரில் பட்டருக்கருள் செய்த
தையல் அபிராமவல்லி

ஏரார் மழைக்கண்ணி எண்ணரிய நின்கோலம்
யாவும் எமை ஆள வலவோ
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 3

மாதவன், சீதரன் மதுசூதனன் துளசி
மாலை மார்பன் கேசவன்
வைகுந்தன், அச்சுதன், மலைமேலும் அலைமேலும்
வாழ்கின்ற மறைநாயகன்

தாதவிழ் மலர்க்கூந்தல் ஜானகிமணவாளன்
சனார்த்தணன் தேவதேவன்
சாரங்கன், நாரணன், தாமோதரன் கோதை
தலைவன், ஆழ்வார்கள் நேசன்

மேதினி அளந்ததிரி விக்(கி)ரமன், திருமகள்
விழைகின்ற பதுமநாபன்
வேறு வேறான பெயர் நூறுநூ றாய்விரியும்
மேகவண்ணன் தங்கையே!

ஈதென வரைந்து யாம் ஓதுதற் கரியநின்
இசைபாட மொழியேது காண்
இறைவினைஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே. 4

மூவர்க்கும் தேவர்க்கும் யாவர்க்கும் மேலான
முதல்வி, முக்கண்ணி போற்றி
முறையாகத் தொழுவோர்க்குத் துணையாகி வழிகாட்டும்
முத்தமிழ்ச்செல்வி போற்றி

நாவுக்கும் நெஞ்சுக்கும் நலம்தந்(து) இனிக்கின்ற
நாதாந்த சக்தி போற்றி
நான் என்றும் எனதென்றும் நலியாத நிலைசேர்க்கும்
ஞானப் பூங்கோதை போற்றி

பாவுக்கும் பூவுக்கும் பாதம் பெயர்த்தருளும்
பாண்டிமாதேவி போற்றி
பணிவார்தம் துயரோடு பிணியாவும் பொடியாக்கும்
பரமகல் யாணி போற்றி

ஏவல் கொண்டுலகு பல காவல்செய், அன்னைநின்
இணையடிகள் போற்றி, போற்றி
இறைவி எனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 5

பொன்னும் நீநான்தேடும் பொருளும் நீ புகழும் நீ
போகங்கள் யாவும் நீயே
புறமும் நீ அகமும் நீ புவியெங்கும் நான் காணும்
பொலிவு நீ போதம் நீயே

முன்னும் நீ நடுவும் நீ முடிவும் நீ முடிவுலா
முழுமை நீ ஞானம் நீயே
முதுமை நீ இளமை நீ மோகம் நீ தாகம் நீ
மோனம் நீ கானம் நீயே

மன்னும்நீ தான் எனது வாழ்வென்று வளம் என்று
மனமுருகி நின்றதெல்லாம்
வஞ்சமோ? எனதுயர் கொஞ்சமோ? இவ்வாறு
மறப்பதுவும் ஒரு நெஞ்சமோ

இன்னும் நீ சற்றும் இரங்காதிருந்திடில்
என்னுயிர் இனி மிஞ்சுமோ?
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயலை வாழும் உமையே 6

ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரிலே
அழகாக வீற்றிருப்பாய்
அங்குசம் பாசம் கரும்பு வில் ஐங்கனை
அங்கையில் ஏற்றிருப்பாய்

வேயின் குழல் முழவு வீணைநாத ஸ்வரம்
மேவுமிசை கேட்டிருப்பாய்
விறலியர் நடம்புரிய வேறு வேறான கலை
விந்தைகள் நயந்திருப்பாய்

ஞாயிறு முதற் பிரமன் நாராயணன் துதித்திடவும்
ஞாலமுழு தாண்டி ருப்பாய்
நாடிவரும் அன்பர்க்குக் கோடிநலம் தந்துலகில்
நலிவின்றிக் காத்திருப்பாய்

ஈயென இரந்துன்னை வேண்டவும் வேண்டுமோ
எனையும் நீ ஆதரிப்பாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 7

மாரியாய் மேரியாய் முகமது நபிக்கருள
வந்த ஒரு மாசக்தியாய்
மனவாக் கிறந்ததிருவருளாய் மதங்கள் தோறும்
வாழ்கின்ற தெய்வம் நீயே

ஓரிடம் ஒருகுணம் ஒருநிலை ஒருருவம்
ஒருபெயர் ஒருவிகற்பம்
ஒன்றுமில்லாத படி ஒவ்வொன்றும் தானாகி
உணர்வரிய பிரமம் நீயே

ஆரியம் திராவிடம் ஆங்கிலம் சீனமென
அமைகின்ற மொழிகள் நீயே
ஆமென்றும் இல்லையென அறுதியுடன் வாதித்தும்
அடைவரிய எல்லை நீயே

யாரென்ன சொன்னாலும் யான் உன்னை ஒரு நாளும்
ஐயுற்ற தில்லை தாயே
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 8

துயிலெலும் வேளையில் சுவைநீர் அருந்துகையில்
துறைநீர் படிந்தெழுகையில்
தொழுகையில் பலபணியும் புரிகையில் இன்பமொடு
துன்பங்கள் எதிர்வருகையில்

வயிராற உண்ணுகையில் மாதரார் தோட்புறம்
மனமுருகி உயிர்தோய் கையில்
மக்கள் மெய் தீண்டுகையில் மாறாத காதலொடு
வண்டமிழ்ச் சுவை ஆய்கையில்

அயலெவரும் அறியாமல் அன்னையுனை வழிபடும்
ஆசைமகன் நானில்லையா
ஆசைமகன் தருகின்ற வாசமலர் மாலைகள்
அத்தனையும் தேனில்லையா?

இயலும்வரை பாடியும் எடுத்தளிக்காமல் நீ
இருப்பதொரு பழியில்லையா?
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 9

காற்றைப் படைத்தவள் நீயென்ற போதிலும்
கவரிகள் வீசுகின்றோம்
கனலும்உன் வடிவெனிலும் கற்பூர தீபங்கள்
கமழ்தூபம் காட்டுகின்றோம்

ஆற்றையும் கடலையும் அருளியநின் மேனிக்கும்
அபிடேக நீர்சு மந்தோம்
அங்கிங் கெனாதுவெளி எங்குமுள நீ உறைய
ஆங்காங்கு கோயில் செய்தோம்

போற்றரிய நின்வடிவைப் பொன்னிலும் கல்லிலும்
பூசித்து வாழ்த்துகின்றோம்
புவிமீது நீ தந்த பொருளன்றி வேறொன்றைப்
போய்தேடி எங்கு பெறுவோம்

ஏற்றருள வேண்டும் என இதயத்தை எம் அன்பை
இணைமலர்த் தாளில் வைத்தோம்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 10

என்னகவி பாடினால் உன் மனது மாறுமோ
என்மீதும் கருணை வருமோ
எவர்மூலம் அணுகினால் யான் செய்யும் விண்ணப்பம்
எளிதாக நிறைவேறுமோ

சொன்னபடி கேளாமல் துயர் செய்யும் என்மனம்
தூய்மைபெற வழியுமுண்டோ?
சோதித்து வாட்டுவது போதுமென உன்னிடம்
சொல்லுபவர் யாருமிலையோ?

சின்னமலர் என்றாலும் தேன்துளி சுமந்து தவம்
செய்துவரும் மலரல்லவோ?
செப்புவது பிழைபடினும் செவியின்பம் தரவல்ல
சேய்மழலை மொழியல்லவோ?

இன்னபடி தான் பெற்ற பிள்ளைதுயர் எய்துகையில்
இளகாத தாயுமுண்டோ?
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 11

நெற்றியில் நீ தந்த குங்குமம் இருக்கையில்
நெஞ்சினில் மயக்க மில்லை
நேரான சிந்தையோடு போராட வந்தபின்
நினைவினில் குழப்ப மில்லை

முற்றுமுனை நம்பியே முறையோடு மேற்கொள்ளும்
முயற்சியில் தயக்க மில்லை
மோகவயமாக உனைத் தாகமுடன் பாடிவரும்
முத்தமிழ் சலிப்பதில்லை

உற்றபகை யாரெனிலும் உன் துணை கிடைத்தபின்
ஓய்வுற நினைப்பதில்லை
உலகமோ ரேழுமே எதிராக நின்றாலும்
உண்மையை மறைப்பதில்லை
இற்றதினி அச்சம் இடர் கவலை நோய்பகைகள்
இன்னல்கள் இல்லை இல்லை
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 12

ஓமெனும் மந்திரத்துட் பொருள் ஆகின்ற
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி
ஊழிதொறும் ஊழிதொறும் உயர் அறம் காக்கின்ற
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி

நாமமும் உருவமும் பலவாகி உலகாளும்
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி
ஞானமும் இச்சையும் கிரியையும் தானான
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி

சேமமும் இன்பமும் சித்தியும் உதவிடும்
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி
ஸ்ரீ சக்ர நிலையத்தில் சிவசக்தி வடிவான
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி

யாமும்எம் கல்வியும் யாவும் உன் அடைக்கலம்
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 13

வாழ்த்து


பொலிகஇவ் வையகம் பொலிக நெடு வானகம்
போயொழிக துயரமெல்லாம்
புதியசொல் புதியபொருள் புதிய சுவை புதியஇசை
புலரட்டும் உலகமெல்லாம்

மலிகவளம் வளர்கநலம் வாழ்கவே நல்லறம்
மயக்கங்கள் யாவும்தீர்க!
மங்கல மடைந்தையர் மனையறம் நனிதழைக
மடமைகள் வீழ்க! வீழ்க!!

கலிகெடுக எங்கெங்கும் கருணை அரசோச்சுக
கயமைகள் நிலம்பு தைக!
கலைமகள் விளக்கமாய் திருமகள் பெருக்கமாய்க்
காலங்கள் அமுதாகுக

இலம்பா(டு) ஒன்றில்லாமல் யாவர்க்கும் யாவும்இனி
எய்தநீ ஆணைதருக
இறைவிஎனை ஆண்டரும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே.

வரம்


தேவாதி தேவிநின் தெய்வமாக் கருணையால்
தீராத நோய்கள் தீரும்
செல்வமும் செல்வாக்கும் செருமுனையில் வெற்றியும்
சீர்நிலை பேறும் சேரும்

பூவுலகில் நிலையான புகழ்பெருகும் அறிவில்ஒரு
புதிய ஒளிதான் பிறக்கும்
பூண் ஆள் இடம் துணை புத்திரர் பசுக்கள் எனும்
பொலிவு வரும் உயிர் தழைக்கும்

பாவங்கள் ஏழ்மைகள் பழவினைகள் எனும் இவைகள்
பனிபோல் அகன்றுநீங்கும்
பத்தியொடு சொல்வார்க்குச் சித்திகள் கைகூடும்
பாரின் மிசை அமைதி ஓங்கும்

யாவும் கடந்தபே ரின்பநிலை கிட்டும்என
இசைபாடி வாழ்த்து கின்றோம்
இறைவினை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே.
எண்முதல் வரிபாடியவர்Play
1 MP3/M4804.MP3A093சின்னச் சின்னக் காவடி செந்தில் நாதன் காவடி ….செல்வி பிரியா பழனியப்பன்Select
2 MP3/M4803.MP3A093பழனி என்றசொல் எனக்கு ஜீவமந்திரம்-அதைப் ….செல்வி பிரியா பழனியப்பன்Select
3 MP3/M4608.MP3A090சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்….சுவாமிநாதன் (பழம் நீ)Select
4 MP3/M4607.MP3A090சாய்தாடு முருகே சாய்ந்தாடுசுவாமிநாதன் (பழம் நீ)Select
5 MP3/M4606.MP3A090முத்து குமரா முத்து குமரா வா வா ..சுவாமிநாதன் (பழம் நீ)Select
6 MP3/M4605.MP3A090மோதகம் நிவேதனம்: முஷிகம் உன் வாகனம்:….சுவாமிநாதன் (பழம் நீ)Select
7 MP3/M4604.MP3A090அரோகரா அரோகரா ஆறுமுக சாமிசுவாமிநாதன் (பழம் நீ)Select
8 MP3/M4603.MP3A090ஆடுக ஊஞ்சல் ஆடுகவே ….சுவாமிநாதன் (பழம் நீ)Select
9 MP3/M4602.MP3A090ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே ….சுவாமிநாதன் (பழம் நீ)Select
10 MP3/M4601.MP3A090கமுகு பலாவும் வாழையும் நெல்லும் …..சுவாமிநாதன் (பழம் நீ)Select
11 MP3/M4502.MP3A089பழனி மலைக்கு நான் வராமல்கருப்பஞ்செட்டி (பழம் நீ)Select
12 MP3/M4501.MP3A089பழநி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத்தேரினிலேகருப்பஞ்செட்டி (பழம் நீ)Select
13 MP3/M4407.MP3A088ஆறுமுக வேலவா அழகுமுகம் காட்டிவா …. லெட்சுமணன் (பழம் நீ)Select
14 MP3/M4406.MP3A088நல்ல தமிழ்ச் சொல் லெடுத்து நாளும் பாடு….லெட்சுமணன் (பழம் நீ)Select
15 MP3/M4405.MP3A088கந்தவேலை வணங்குலெட்சுமணன் (பழம் நீ)Select
16 MP3/M4404.MP3A088எத்தனை அலங்காரம் முத்தமிழ் முருகனுக்கு ….லெட்சுமணன் (பழம் நீ)Select
17 MP3/M4403.MP3A088ஈசனோடு பேசியது போதுமே ….லெட்சுமணன் (பழம் நீ)Select
18 MP3/M4402.MP3A088அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்லெட்சுமணன் (பழம் நீ)Select
19 MP3/M4401.MP3A088ஆறுபடை வீடழகா முருகா ஆனந்தனே மால்முருகா ….லெட்சுமணன் (பழம் நீ)Select
20 MP3/M4306.MP3A087ஆண்டிமேல் ஆசையாய் ஓடையிலே….அழகம்மை ஆச்சிSelect
21 MP3/M4305.MP3A087குன்றக்குடியில் முருகோனேஅழகம்மை ஆச்சிSelect
22 MP3/M4304.MP3A087கருவிலே நான் தூங்கிஅழகம்மை ஆச்சிSelect
23 MP3/M4303.MP3A087சிவசிவாய சிவசிவாய சிவசிவாய மந்திரம்அழகம்மை ஆச்சிSelect
24 MP3/M4302.MP3A087நமச்சிவாயம் நமச்சிவாயம் நல்ல மந்திரம்அழகம்மை ஆச்சிSelect
25 MP3/M4301.MP3A087ஆதரிப்பாய் கணபதியேஅழகம்மை ஆச்சிSelect
26 MP3/M4205.MP3A086கமுகு பலாவும் வாழையும் நெல்லும் …..வள்ளியம்மைSelect
27 MP3/M4206.MP3A086அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் …வள்ளியம்மைSelect
28 MP3/M0237.MP3A044நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கஅருண் வீரப்பாSelect
29 MP3/M0236.MP3A044நாட்டமிகு தேவியாம் நாநிலம் போற்றிடும்அருண் வீரப்பாSelect
30 MP3/M4101.MP3A085எனதென எனதென எத்தனையோலெ. சுப்பிரமணியன்Select
31 MP3/M4008.MP3A084அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்கமலா பழனியப்பன்Select
32 MP3/M4007.MP3A084உள்ளம் உருக விழி செருக..கமலா பழனியப்பன்Select
33 MP3/M4006.MP3A084தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர….கமலா பழனியப்பன்Select
34 MP3/M4005.MP3A084அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் …கமலா பழனியப்பன்Select
35 MP3/M4004.MP3A084மஞ்சல் முகத்தழகும் மத்தியில்கமலா பழனியப்பன்Select
36 MP3/M4003.MP3A084எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம்…..கமலா பழனியப்பன்Select
37 MP3/M4002.MP3A084அங்கும் இங்கும் எங்குமாய் …..கமலா பழனியப்பன்Select
38 MP3/M4001.MP3A084மங்களத்து நாயகனே மண்ணாளும்…..கமலா பழனியப்பன்Select
39 MP3/M3901.MP3A083மங்களத்து நாயகனே மண்ணாளும்…..ராம்தேவ்Select
40 MP3/M3807.MP3A082அள்ளி முடிச்ச கொண்டையப்பா ….வள்ளியப்பன். நாSelect
41 MP3/M3806.MP3A082தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர….வள்ளியப்பன். நாSelect
42 MP3/M3805.MP3A082மோதகம் நிவேதனம்: முஷிகம் உன் வாகனம்:….வள்ளியப்பன். நாSelect
43 MP3/M3804.MP3A082தாயரசி பார்வதியாள் தரவில்லையோ பாலென்று ….வள்ளியப்பன். நாSelect
44 MP3/M3803.MP3A082அங்கும் இங்கும் எங்குமாய் …..வள்ளியப்பன். நாSelect
45 MP3/M3802.MP3A082ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே ….வள்ளியப்பன். நாSelect
46 MP3/M3801.MP3A082ஆதிசேஷா அனந்தசயனா…..வள்ளியப்பன். நாSelect
47 MP3/M3701.MP3A081கொடுமளுர் முருகன் பதிகம்காளையப்பன் VSelect
48 MP3/M3702.MP3A081காருற்ற தென்பரங்குன்றம்காளையப்பன் VSelect
49 MP3/M1914.mp3A061கையகல நெஞ்சுண்டு ஆனால் உள்ளேசுப்பிரமணியன். பழSelect
50 MP3/M1913.mp3A061கற்பூர நாயகியே ! கனகவல்லிசுப்பிரமணியன். பழSelect
51 MP3/M1706.mp3A059எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளையம் பூக்கண்கள்…..சோமசுந்தரம். பழSelect
52 MP3/M1709.mp3A059சீதக் களபச் செந்தா மரைப்பூம்…..சோமசுந்தரம். பழSelect
53 MP3/M1710.mp3A059குங்கும நெற்றி கூறிடும் வெற்றிசோமசுந்தரம். பழSelect
54 MP3/M3333.MP3A077துள்ளி விளையாடும் சின்னப் பிள்ளைமுகம் மறந்து ….சோமசுந்தரம் லெ (பெங்களூர்)Select
55 MP3/M3332.MP3A077முத்தான முத்துக் குமரா முருகையா வா வாசோமசுந்தரம் லெ (பெங்களூர்)Select
56 MP3/M3331.MP3A077குன்றுதோர் ஆடிவரும் குமரனுட வேலுயிதுசோமசுந்தரம் லெ (பெங்களூர்)Select
57 MP3/M3330.MP3A077பாலனைப்போல் தோன்றுகின்றாய் பழநிவேலாசோமசுந்தரம் லெ (பெங்களூர்)Select
58 MP3/M3329.MP3A077உறவை மறந்தாலும், உணவை மறந்தாலும்சோமசுந்தரம் லெ (பெங்களூர்)Select
59 MP3/M3328.MP3A077உன்னை சரணடைந்தேன் உன்புகழை பாடிவந்தேன்சோமசுந்தரம் லெ (பெங்களூர்)Select
60 MP3/M3327.MP3A077உன்னெழில் கோலம், என்னிரு கண்ணில்,சோமசுந்தரம் லெ (பெங்களூர்)Select
61 MP3/M3326.MP3A077ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜேஸ்வரி…..சோமசுந்தரம் லெ (பெங்களூர்)Select
62 MP3/M3325.MP3A077அம்மா மதுரை மீனாக்ஷி…..சோமசுந்தரம் லெ (பெங்களூர்)Select
63 MP3/M3324.MP3A077ஆலயத்தை சுற்றிவந்தால் அருள்கிடைக்குமடிசோமசுந்தரம் லெ (பெங்களூர்)Select
64 MP3/M3323.MP3A077ஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீசோமசுந்தரம் லெ (பெங்களூர்)Select
65 MP3/M3506.MP3A079எட்டடிக் குச்சுக்குள்ளே-முருகா எப்படி….சொர்ணவள்ளி (எ) அகிலாSelect
66 MP3/M3504.MP3A079திருவளரும் பழனி ஆண்டி வந்தானே-அவன் ….சொர்ணவள்ளி (எ) அகிலாSelect
67 MP3/M3620.MP3A080சரவணையி லேபிறந் தாறுமுக வடிவான ….அருளிசைமணி நாகப்பன்.MSelect
68 MP3/M3612.MP3A080அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் …அருளிசைமணி நாகப்பன்.MSelect
69 MP3/M3410.mp3A078பழனிமலை படியேறுசோமசுந்தரம் MSelect
70 MP3/M3407.mp3A078நாளை வருவதை யார் அறிவார்சோமசுந்தரம் MSelect
71 MP3/M3312.mp3A077கோலாலம்பூரிலே கோவிலில் குடிசோமசுந்தரம் லெ (பெங்களூர்)Select
72 MP3/M3306.mp3A077கஜமுகனே கணபதியே கருணை செய்வாயே…சோமசுந்தரம் லெ (பெங்களூர்)Select
73 MP3/M1909.mp3A061எத்தனை அலங்காரம் முத்தமிழ் முருகனுக்கு ….சுப்பிரமணியன். பழSelect
74 MP3/M3411.mp3A078பொன்னா வரனம் பூவா வரனம்சோமசுந்தரம் MSelect
75 MP3/M3402.mp3A078அப்பன் பழநி அப்பனடா-அவன் ….சோமசுந்தரம் MSelect
76 MP3/M3317.mp3A077பூவாலே மாலையிட்டு பொன்னடியில்…சோமசுந்தரம் லெ (பெங்களூர்)Select
77 MP3/M3316.mp3A077பழனி மலைக்கு நான் வராமல்சோமசுந்தரம் லெ (பெங்களூர்)Select
78 MP3/M3201.mp3A076ஆடுக ஊஞ்சல் ஆடுகவே ….நாகாச்சிSelect
79 MP3/M3003.mp3A074அருமறையின் பொருளாகி ஆன்ந்த வாழ்வுலெக்ஷ்மணன் (ஆர்காட்)Select
80 MP3/M0233.mp3A044ஓம் ஸ்ரீ சக்தி ஓம் ஸ்ரீ சக்தி …அருண் வீரப்பாSelect
81 MP3/M3106.mp3A075வேலுண்டு வினையில்லை மயிலுண்டுமீனாக்ஷி சுந்தரம்Select
82 MP3/M3105.mp3A075வைகை கரையோரம் வளர் மதுரைமீனாக்ஷி சுந்தரம்Select
83 MP3/M3104.mp3A075செந்தமிழ் பாவை தெய்வானைமீனாக்ஷி சுந்தரம்Select
84 MP3/M3103.mp3A075பழனி மலைக்கு நான் வராமல்மீனாக்ஷி சுந்தரம்Select
85 MP3/M3102.mp3A075மாணிக்கமே மாணிக்கமே கண்ட அருள்மீனாக்ஷி சுந்தரம்Select
86 MP3/M3101.mp3A075மாமலையே மாமலையேமீனாக்ஷி சுந்தரம்Select
87 MP3/M0315.mp3A051வீடு விளங்கிடவே வெற்றிக் கொடிபெறவேசித.சிதம்பரம்Select
88 MP3/M0314.mp3A051வானோங்கு தென்பழனி வளர்ந்தோங்கும் மன்னவனேசித.சிதம்பரம்Select
89 MP3/M0313.mp3A051சிங்கைநகர் மாமணியே முருகய்யாசித.சிதம்பரம்Select
90 MP3/M0312.mp3A051பழனிமலை படியேறுசித.சிதம்பரம்Select
91 MP3/M2905.mp3A073தேனால் அபிஷேகம் நான் செய்ததின் பலனாலோ…ஷண்முகம் SVSelect
92 MP3/M2904.mp3A073ஆண்டிமேல் ஆசையாய் ஓடையிலே….ஷண்முகம் SVSelect
93 MP3/M2903.mp3A073வேலாட மயிலாட வேலாட மயிலாட வினைபோக்கி ….ஷண்முகம் SVSelect
94 MP3/M2902.mp3A073ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜேஸ்வரி…..ஷண்முகம் SVSelect
95 MP3/M2901.mp3A073சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி…..ஷண்முகம் SVSelect
96 MP3/M0308.mp3A051கருவிலே நான் தூங்கி காலங் கழிக்கையில்சித.சிதம்பரம்Select
97 MP3/M0311.mp3A051அங்கயற்கன்னி அம்மா மங்களச் செல்வி…..சித.சிதம்பரம்Select
98 MP3/M0310.mp3A051வருக வருக வருக வருக வடிவுடையம்மாசித.சிதம்பரம்Select
99 MP3/M0309.mp3A051பனி தங்கு நிலவு போல் பால்போல்சித.சிதம்பரம்Select
100 MP3/M2801.mp3A072உள்ளமதில் நலங்கூட ஓங்குபுகழ் வளங்கூடசரவணன்Select
101 MP3/M2701.mp3A071பிள்ளையார் பட்டி வளர் பெருநிதியே கற்பகமேமுத்துக்கருப்பாயி சபாரெத்தினம்Select
102 MP3/M2615.mp3A070தென்பழனி ஆண்டவணை தேடிவந்தோமே ….இளையபெருமாள்Select
103 MP3/M2607.mp3A070கந்தனுக்கு நன்றி மாலை !இளையபெருமாள்Select
104 MP3/M2614.mp3A070நாம்மிது நாம்மிது நம் தலைவன்இளையபெருமாள்Select
105 MP3/M2605.mp3A070ஒருகோடி சந்திரனின் ஒளியானவள்…..இளையபெருமாள்Select
106 MP3/M2604.mp3A070அம்மா மதுரை மீனாக்ஷி…..இளையபெருமாள்Select
107 MP3/M2602.mp3A070ஸ்ரீசக்ர வாசினி சிம்மாசனி…..இளையபெருமாள்Select
108 MP3/M1322.mp3A041தனந்தரும் வயிரவன் தளரடி பணிந்திடின்லெ. சக்திகுமார்Select
109 MP3/M2613.mp3A070சிந்தூரம், குங்குமம், செவ்வானம், அவ்வானம்…..இளையபெருமாள்Select
110 MP3/M2612.mp3A070ஆயெனும் பேர் படைத்துஇளையபெருமாள்Select
111 MP3/M2611.mp3A070அழகான ராங்கியக் கோயிலுள் குடிகொண்டு ….இளையபெருமாள்Select
112 MP3/M2610.mp3A070துள்ளி விளையாடும் சின்னப் பிள்ளைமுகம் மறந்து ….இளையபெருமாள்Select
113 MP3/M2609.mp3A070மாய்யை எனும் வாழ்கையிலேஇளையபெருமாள்Select
114 MP3/M2606.mp3A070மலரில் பிறந்து மலரில் வளர்ந்தவன்இளையபெருமாள்Select
115 MP3/M2616.mp3A070சங்கிலிக் கருப்பனே ஜெகமாலும் …இளையபெருமாள்Select
116 MP3/M2608.mp3A070கமுகு பலாவும் வாழையும் நெல்லும் …..இளையபெருமாள்Select
117 MP3/M2603.mp3A070அன்பு மனக் கோயிலிலே அய்யா உன்னை….இளையபெருமாள்Select
118 MP3/M2601.mp3A070பழனிமலை மேலே, ஓர் அழகுச் சித்திரம் !இளையபெருமாள்Select
119 MP3/M1321.mp3A041ஆதிமூல முருகா, முருகா ஆண்டியான முருகா ….லெ. சக்திகுமார்Select
120 MP3/M1320.mp3A041சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் ….லெ. சக்திகுமார்Select
121 MP3/M1319.mp3A041முத்தைத்தரு பத்தித் திருநகை ….லெ. சக்திகுமார்Select
122 MP3/M2501.mp3A046கந்தவேலை வணங்குவிக்னேஷ் முத்தையாSelect
123 MP3/M2401.mp3A069மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீமீனாக்ஷி ஆச்சிSelect
124 MP3/M1318.mp3A041சிந்தூரம், குங்குமம், செவ்வானம், அவ்வானம்…..லெ. சக்திகுமார்Select
125 MP3/M0606.mp3A054பச்சை மயில் வாகனனேகணேஷ். LSelect
126 MP3/M0227.mp3A044மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீஅருண் வீரப்பாSelect
127 MP3/M0713.mp3A016அள்ளி முடிச்ச கொண்டையப்பா ….ஏ.ஆர்.சுப்பையாSelect
128 MP3/M0712.mp3A016வாவா முருகா வடிவேலா ..ஏ.ஆர்.சுப்பையாSelect
129 MP3/M0711.mp3A016திங்கள் கிழமை உன்னத் தேடிஏ.ஆர்.சுப்பையாSelect
130 MP3/M0710.mp3A016சிங்கப்பூரில் தெண்டபாணி சிரித்து நிற்கிறார்ஏ.ஆர்.சுப்பையாSelect
131 MP3/M0709.mp3A016பண்டாரமாம் பண்டாரம்ஏ.ஆர்.சுப்பையாSelect
132 MP3/M0708.mp3A016பழநி ஆண்டவர் பவனி வருகிறார் தங்கத்தேரினிலேஏ.ஆர்.சுப்பையாSelect
133 MP3/M0707.mp3A016மங்களத்து நாயகனே மண்ணாளும்…..ஏ.ஆர்.சுப்பையாSelect
134 MP3/M0706.mp3A016காக்கும் தெய்வமே-எங்கள் கருப்ப தெய்வமேஏ.ஆர்.சுப்பையாSelect
135 MP3/M0705.mp3A016அலங்கார மண்டபத்தில் மணியோசை கேட்குது ஆனந்தம் ஆனந்தமேஏ.ஆர்.சுப்பையாSelect
136 MP3/M0704.mp3A016ஆறுபடை வீடழகா முருகா ஆனந்தனே மால்முருகா ….ஏ.ஆர்.சுப்பையாSelect
137 MP3/M4205.MP3A086கமுகு பலாவும் வாழையும் நெல்லும் …..வள்ளியம்மைSelect
   
   
பார்வையாளர் எண்: