சீர்வள ருங்கதிர் மாமலை மேவிய
செந்தமிழின் வாசா
செந்தமிழின் வாசா - இந்தப்
பாருல கத்தில் அடியவர் போற்றிடும் பாலகுமரேசா!
வானவர் தானவர் மாமுனி வோர்தொழும்
வான்மயில் வாகனனே
வான்மயில் வாகனனே - தொந்தி
யானைமுகனுக் கிளைய பராபரமாகிய வேலவனே!
பச்சை மரகத மேனியுறும் வாலை
பார்வதி பாலகனே
பார்வதி பாலகனே - துய்ய
நச்சர வில்துயில் ராமன் மருமகனாகிய வேலவனே!
அசுரர்கள் தேகம் திடீர்த் திடீரென
அற்று விழத்தானே
அற்று விழத்தானே -அதிவீரமுள்ள
வெற்றி வேல்விட் டெறிந்தவோர் ஆறு முகத்தானே!
கந்தா கடம்பா குகா ஞான சண்முகா
காலாயுதப் பொருளே!
காலாயுதப் பொருளே! - உன்னைவந்து பணிந்த
அடியவர்க்கு வரம் தந்திடும் மெய்ப்பொருளே!