கந்தசாமியே எங்கள் சொந்தசாமியே

கந்தசாமியே எங்கள் சொந்தசாமியே
கந்தநாதனே எங்கள் சொந்தநாதனே
கந்தசாமியே எங்கள் சொந்தசாமியே
கந்தநாதனே எங்கள் சொந்தநாதனே


காளிபட்டியில் இவர் கந்தசாமியாம்
கலியுகத்திலே கண்கண்ட தெய்வமாம்
கவலையெல்லாமே போக்கும் தெய்வமாம்
கந்தசாமியாம் நம் சொந்தசாமியாம்

மன்னாதிமன்னர் இங்கே மண்டியிடுகின்றார்
மண்மீதினிலே தலைவைத்துப் பணிகின்றார்
உண்மை சொல்லுவேன் பல நன்மை சொல்லுவேன்
உங்கள் கனவெல்லாம் இங்கே நல்ல நினைவாகும்

பச்சைமயில் மீதமர்ந்த பாலகன்தானே
நம் இச்சையெல்லாம் தீர்ப்பதர்க்கு இங்குவந்தானே
சக்திதந்த வேலெடுத்த தங்கமகனாம்
காளிபட்டி கோவில் கொண்ட கந்தசாமியாம்

பழத்துக்காக மலை சென்ற பாலகன்தானே
ஞானப்பழமாகி மலைமேலே கோவில் கொண்டானே
மலைமேலே கோவில் கொண்ட பழனிச்சாமியே
காளிபட்டி கோவில் கொண்ட கந்தசாமியாம்