முத்தான முத்துக்குமரா

முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா


வள்ளி மணாளா வடிவேலழகா
வேலைய்யா வா வா
கந்தா கடம்பா கதிர் வடிவேலா
கந்தையா வா வா

நீ ஆடும் அழகைக் கண்டு
வேலாடி வருகுதைய்யா
வேலாடும் அழகைக் கண்டு
மயிலாடி வருகுதய்யா

மயிலாடும் அழகைக் கண்டு
மனமாடி வருகுதையா
மனமாடும் அழகைக் கண்டு
மக்கள் கூட்டம் பெருகுதையா

பன்னீரால் குளிக்க வைத்து
பட்டாடை உடுக்க வைத்து
சந்தனத்தால் சாந்தெடுத்து
அங்கமெல்லாம் பூசி வைத்து

நீற் பூசி திலகம் வைத்து
நெஞ்சத்தில் உன்னை வைத்து
அன்று பூத்த மலராள் உன்னை
அர்ச்சிப்பேன் வருவாயப்பா