ஆழவந்தவா என்னை ஆழவந்தவா


ஜெயதி சண்முகம் ஜெய ஜெயதி சண்முகம்
ஜெயதி சண்முகம் ஜெய ஜெயதி சண்முகம்
ஜெயதி சண்முகம் ஜெய ஜெயதி சண்முகம்
ஜெயதி சண்முகம் ஜெய ஜெயதி சண்முகம்


ஆழவந்தவா என்னை ஆழவந்தவா
வேலை கொண்டு வா வடிவேலை கொண்டுவா
பகையை வென்று வா என் பகையை வென்று வா
செந்திலாண்டவா திருச்செந்திலாண்டவா

நாளை கொண்டு வா திருநாளை கொண்டுவா
நேரம் கொண்டுவா நல்ல நேரம் கொண்டுவா
மாலை கொண்டுவா மணமாலை கொண்டுவா
குன்றினாண்டவா பரங்குன்றினாண்டவா

கனியை கொண்டுவா அறிவுகனியை கொண்டுவா
பணிவை கொண்டுவா நல்ல பணியை கொண்டுவா
அனைத்தும் கொண்டுவா மயிலை அணைத்து கொண்டுவா
பழனியான்டவா பல மலையினாடவா

பிராணம் தந்தவா பிரணவ பொருளை தந்தவா
பாதம் காட்டவா பொற்பாதம் காட்டவா
ஞானம் தந்தவா என் ஞானபண்டிதா
மலையினாண்டவா சுவாமி மலையின் ஆண்டவா

வீரம் கொண்டவா இரு தாரம் கொண்டவா
கோரம் செய்த அசுரர் நெஞ்சை துவாரம் செய்தவா
தனிமை கொண்டவா சுவாமி துணிவை கொண்டுவா
தனிகை ஆண்டவா திருத்தனிகை ஆண்டவா

வேதம் தந்தவா வேடன்ருபில் வந்தவா
அகமழித்தவா அவ்வை அகமழித்தவா
தமிழை தந்தவா பாடல் எழுத வைத்தவா
சோலை ஆண்டவா பழஞ்சோலை ஆண்டவா

வெங்கட் கணேசன்.- நாச்சியாபுரம்