இராங்கிய கருப்பர்

அரோகரா

அழகான ராங்கியக் கோயிலுள் குடிகொண்டு
அரசாள வந்த கருப்பன்
அடியடியின் வாழைபோல் எனது குலங்கோத்திரம்
அத்தனையும் காக்கும் கருப்பன்
மேலாளர் கீழாளர் பேதங்கள் இல்லாது
மெய்யாள வந்த கருப்பன்
முன்னோடி சப்பாணி இருவரையும் கொண்டிந்த
உலகாள வந்த கருப்பன்

புளியமரத் தடியில்வளர் பெரிய கருப்பண்ணனிவன்
கோவில் கொண்டாடு மனமே
புண்ணியத் தீர்த்தமும் புளியிலையும் பெற்றிட்டால்
புகழோடு வாழ்வு வருமே
கரியபெரு மீசையும் கையிலொரு அரிவாளும்
கருப்புநிறப் பட்டும் உடையான்
காலினில் சலங்கையுடன் காணக் கண்கூசவே
குதிரைமேல் ஏறி வருவான்

ஏவல்பிலி சூனியம் எவர்செய்ய வந்தாலும்
இயலாது கருப்பனிடமே
எதுவந்தாலும் போனாலும் கருப்பண்ணன் கருணையால்
எல்லாம் நலமாகுமே
கருப்பண்ணன் வாழ்கின்ற ராங்கியப்பதி என்றும்
கைலாசம் போல் இருக்கும்
கொண்டாடு கொண்டாடு பெரிய கருப்பண்ணனை
குறையாத செல்வ மிகுமே.