கருப்பர் அழைப்பு
(வேல் வேல் முருகா வேலய்யா மெட்டு)

கருப்பா கருப்பா கருப்பய்யா
கவலையைத் தீர்ப்பாய் கருப்பய்யா
கருப்பா கருப்பா கருப்பய்யா
கவலையைத் தீர்ப்பாய் கருப்பய்யா


கருப்பா உன்னை அழைக்கின்றேன்
காவியம் பாடித் துதிக்கின்றேன்
கண்ணின் மணியை அழைக்கின்றேன்
காலமும் உன்னைத் துதிக்கின்றேன்(கருப்பா)

கோட்டைக் கருப்பரை அழைக்கின்றேன்
கொடுமைகள் அழிய துதிக்கின்றேன்
வேட்டை செல்கையில் அழைக்கின்றேன்
வெற்றியைத் தந்திட துதிக்கின்றேன்(கருப்பா)

சங்கிலிக் கருப்பரை அழைக்கின்றேன்
சங்கடம் தீர்த்திட துதிக்கின்றேன்
சந்ததி தழைக்க அழைக்கின்றேன்
சரணம் பாடித் துதிக்கின்றேன்(கருப்பா)

காளி யம்மனை அழைக்கின்றேன்
கவிதைகள் பாடித் துதிக்கின்றேன்
கரங்கள் கூப்பி அழைக்கின்றேன்
கவலைகள் தீர்த்திட துதிக்கின்றேன்(கருப்பா)

சின்னக் கருப்பரை அழைக்கின்றேன்
சிறுமைகள் தீர துதிக்கின்றேன்
சிங்காரக் கருப்பரை அழைக்கின்றேன்
சிறப்புகளைத் தர துதிக்கின்றேன்(கருப்பா)

முத்துக் கருப்பரை அழைக்கின்றேன்
முத்தமிழ் பாடி துதிக்கின்றேனன்
முப்பிலி கொடுத்து அழைக்கின்றேன்
முறையாய் உன்னைத் துதிக்கின்றேன்(கருப்பா)

அன்பால் உன்னை அழைக்கின்றேன்
அமைதியைத் தந்திட துதிக்கின்றேன்
மனதால்உன்னை அழைக்கின்றேன்
மங்களங்கள் தர துதிக்கின்றேன்(கருப்பா)

-மீ. மீனாட்சி சுந்தரம், தேவகோட்டை.