கணபதி ஜய ஜய

சிந்தித் தவர்க்கருள் கணபதி ஜய ஜய
சீரிய வானைக் கன்றே ஜய ஜய
அன்புடை அமரரைக் காப்பாய் ஜய ஜய
ஆவித் துணையே கணபதி ஜய ஜய
இண்டைச் சடைமுடி இறைவா ஜய ஜய
ஈசன் தந்தருள் மகனே ஜய ஜய
உன்னிய கருமம் முடிப்பாய் ஜய ஜய
ஊர்நவ சந்தி உகந்தாய் ஜய ஜய
எம்பெரு மானே இறைவா ஜய ஜய
ஏழுகுலந் தொழ நின்றாய் ஜய ஜய
ஐயாக் கணபதி நம்பியே ஜய ஜய
ஒற்றை மருப்புடை வித்தகா ஜய ஜய
ஓங்கிய வானைக் கன்றே ஜய ஜய
ஒளவியமில்லா அருளே ஜய ஜய
அக்கர வஸ்த்து ஆனவா ஜய ஜய
கணபதி என்வினை களைவாய் ஜய ஜய
ஙப்போல் மழுவொன் றேந்தியே ஜய ஜய
சங்கரன் மகனே சதுரா ஜய ஜய
ஞய நம்பினார் பாலாடிய ஜய ஜய
இடம்படு விக்கின விநாயகா ஜய ஜய
இணங்கிய பிள்ளைகள் தலைவா ஜய ஜய
தத்துவ மறைதெரி வித்தகா ஜய ஜய
நன்னெறி விக்கின விநாயகா ஜய ஜய
பள்ளியி லுறைதரும் பிள்ளாய் ஜய ஜய
மன்று ளாடும் மணியே ஜய ஜய
இயங்கிய ஞானக்குன்றே ஜய ஜய
அரவக் கிண்கிணி ஆர்ப்பாய் ஜய ஜய
இலகக் கொம்பொன் றேந்தியே ஜய ஜய
வஞ்சனை வலவுந் தீர்ப்பாய் ஜய ஜய
அழகிய ஆனைக் கன்றே ஜய ஜய
இளமத யானை முகத்தாய் ஜய ஜய
இரகுபதி விக்கின விநாயகா ஜய ஜய
அனந்த லோடாதியில் அடிதொழ ஜய ஜய

-ஒளவையார்