லயன் சித்தி விநாயகர்

அரோகரா

சிந்தையில் உறைந்திட்டசிங்கையின்
நாயகன் சீர்மிகுலயன்சித்தியே
விந்தைபல புரிந்திடும்வித்தகன் நீயென
வியந்துதான்போற்றி நின்றோம்

பக்தரின் மனதினில்சக்தியைத் தந்திடும்
முத்தானஉனது வடிவம்
முத்தமிழ்போல் முனைப்புடன்சன்னிதியில்
வீற்றிட்டமுழுமுதற் கடவுள் நீயே.

உடைத்திட்ட தேங்காயின்சிதறிட்ட பாகம்
போல்தீமைகள் உடையுதைய்யா
எடுத்திட்ட பணியுமேஏற்றமுடன் நடத்திட
நித்தம் உன்தயவு வேண்டும்

வாடிய மனங்களுன் ஆலயம்
வந்தபின் மாறிய மாயமென்ன
தேடிய செல்வமும் கோடியாய்குவிந்திட்ட
பெருமைதான் என்னஎன்ன?

உமையவள் மைந்தனே உனதருள்
வேண்டியே உளமாறபாடுகின்றோம்
எமைக்காத்து அருள்புரியஇமைப்பொழுதில்
வந்திடுவாய்தாமதமேதுமின்றி

கியோங் சேக் சாலையின்முகப்பினில்
அமர்ந்திட்டகற்பக மூர்த்தி நீயே.
வாழ்வாங்கு வாழ்ந்திடவேஉன் வாசல்
வந்திட்டோம்வளமான வாழ்வு தருவாய்

ஆலயம் சுற்றுவோர் காரியம்கைகூட
நிச்சயம் நீ வருவாய்
தோள் கொண்டு அவர்களின்குறைகளை
நீயுமே முற்றிலும்களைந்தெறிவாய்

வேல்கொண்டு உனைக்காணபுனர்பூச
நாளிலே அன்பானதம்பி வருவான்
பார்போற்றும் உன்புகழைப்பாடிட
எமக்கு நீ முத்தான தமிழ்தருவாய்.

நல்லோர் நலம்பெறவும்நன்மை பெருகிடவும்
ஆனைமுருகன்அருள் வேண்டுமே
எல்லோரும் அன்புடனேஅமைதியாய் வாழ்ந்திட
நீ அருகினில் வந்திடப்பா

வாயாறப் பாடிடுவோம் உளமாற வணங்கிடுவோம்
வினையறுக்க வந்துவிடு
நோயற்ற வாழ்வுடனேசோர்வற்ற மனதையும்
தந்தெம்மை காத்திடப்பா.

-அழகு சுந்தரம்