தண்ணீர் மலை ஆண்டவனே

வேல்வேல் முருகா வேல்முருகா
வேல்வேல் முருகா வேல்முருகா
வேல்வேல் முருகா வேல்முருகா
வேல்வேல் முருகா அரோகரா


தண்ணீர் மலை ஆண்டவனே
தர்மம் தழைக்க செய்பவனே.
நெஞ்சின் தாகம் தீர்ந்திடவே
உன்னை தேடி வருகின்றோம்.
காவடி தாங்கி வருகின்றோம்
கால் நடையாக வருகின்றோம்.
தண்ணீர் மலையில் இருப்பவனே
உன் திருவருள் தந்துகாத்திடுக.
(வேல்வேல்)
உலகம் முழுதும் உன்கோயில்
திருப்பணி செய்து வழிபட்டோம்.
உள்ளகோயில் உன் கோயில்
உனனை நினத்தே வழிபட்டோம்.
உள்ளம் தெளிவினை பெற்றிடவே
உள்ளளி பூக்க செய்திடுவாய்.
உலகம் காக்கும் பரம்பொருளே
தண்ணீர் மலை ஆண்டவனே.
(வேல்வேல்)
உலகம் முழுதும் வாழுகின்ற
உன்னருள் பெற்ற பக்தர்களும்
உன்னை காண வருகின்றார்
உன்புகழ் பாடி பரவுகின்றார்.
உள்ளம் உருகி வேண்டுகின்றார்
காவடிதாங்கி டுகின்றார்.
உலகம் தழைத்து உயர்வுறவே
எழவாய் தண்ணீர் மலையானே.
(வேல்வேல்)
வாழ்வில் சோதனை எத்தனையோ
வறுத்தும்நோய்கள் எத்தனையோ.
வாட்டும் பயங்கள் எத்தனையோ
ஆசை பேய்கள் எத்தனையோ.
எத்தனை எத்தனை இன்னலப்பா
ஒரு எல்லைக்குட்பட்ட வாழ்க்கையினில்.
அத்தனை இன்னலும் அகன்றுவிட
உன் திருவருள் தந்துகாத்திடுக.
(வேல்வேல்)
தண்ணீர் மலை ஆண்டவனே
திருவடி பணிந்து வணங்குகின்றோம்.
மனத்தின் மாசுகள் களைந்திடப்பா
மகிழ்ச்சிகள் பொங்க செய்திடப்பா
நானிலம் போற்றும் நல்லவராய்
திருப்பணிகள் செய்து வாழ்ந்திடவே
உன்னருள் ஈந்து காத்திடுக
தண்ணீர் மலை ஆண்டவனே.

லெ.சக்திகுமார்.
டிசம்பர் 2006.