நமச்சிவாயம் நமச்சிவாயம் நல்ல மந்திரம்


நமச்சிவாயம் நமச்சிவாயம் நல்ல மந்திரம்
நாழும் சொன்னால் நல்ல நேரம் நமக்கு வந்திடும்


நமச்சிவாயம் நமச்சிவாயம் நல்ல மந்திரம்
நாழும் சொன்னால் நல்ல நேரம் நமக்கு வந்திடும்
இமைப்பொழுதும் இடைவிடாமல் உச்சரியுங்கள்
இல்லையென்று சொல்பவரை எச்சரியுங்கள்
(நமச்சிவாயம்)
கமகமக்கும் ஊதுபத்தி ஏற்றிப்பாருங்கள்
கற்பூர தீபமதை காட்டிப்பாருங்கள்
உமையருகில் இருப்பவன்பேர் உரக்கச்சொல்லுங்கள்
உள்ளம் மகிழ வாழ்க்கையினை அமைத்துக்கொள்ளுங்கள்
(நமச்சிவாயம்)
கங்கையினை முடியிலேந்தி குளிர்ச்சி கொண்டவன்
கன்னியினை மடியில் வைத்து மகிழ்ச்சி கண்டவன்
எங்கும் செல்ல காளையினை எதிரில் வைத்தவன்
இன்பங்களை நமக்கு நாளும் அள்ளி தருபவன்
(நமச்சிவாயம்)
மாங்கனியை கணபதியாம் மகனிடம் ஈந்தார்
மால்மருகன் கோபத்தோடு மலையினை சேர்ந்தார்
தீங்குவராதிருக்க அவன் திருப்பெயர் சொல்வோம்
சிவல்புரியார் பாடலினால் வாழ்கையை வெல்வோம்
(நமச்சிவாயம்)
நதிகளினை பரியாக்கி நாடகம் போட்டார்
அவரை நம்பிவிட்டால் பக்தருக்கு நற்றுணை ஆவார்
அருள்வேண்டி அஞ்செழுத்தை நள்ளும் சொல்லுங்கள்
அதுதானே பாவம் தீர்க்கும் அறிந்து கொள்ளுங்கள்
(நமச்சிவாயம்)
முன்பொருநாள் கண்ணப்பன் முகத்தில் ஏறினார்
மூலமுதல் கடவுளவன் அகத்தில் ஏறினார்
பின்பொருநாள் மதுரையிலே பிரம்படிபட்டர்
பிட்டுக்கு மண் சுமந்து பெருமைகள் பெற்றார்
(நமச்சிவாயம்)
நாயன்மார் இல்லங்களை நாடிச் சென்றவன்
நல்லவரைச் சோதித்து அருளைத் தருபவன்
மாலவனின் தங்கையினை மணந்து கொண்டவன்
மதுரையிலே விளையாடி வெற்றி கண்டவன்
(நமச்சிவாயம்)
கடையூரில் காலனைத்தான் காலினில் வென்றான்
கந்தனிடம் உபதேசம் காதினில் கேட்டான்
அடையாளம் காட்டிடுவோம் அவனது வீட்டை
மனதில் அன்பிருந்தால் அடைந்திடலாம் அவனது கோட்டை
(நமச்சிவாயம்)
பொற்கிழியை தருமி வாங்க உதவி செய்தவன்
புல்லைக் கூட நெல்லாய் மாற்றி காட்சி தந்தவன்
நற்பதவி வேண்டுமென்றால் நாடி வாருங்கள்
நமச்சிவாய மந்திரத்தை நாளும் சொல்லுங்கள்
(நமச்சிவாயம்)
அற்புதங்கள் நடப்பதினை அறிந்துகொள்ளுவீர்
அன்றுமுதல் சிவன் துணையே என்று சொல்லுவீர்
கற்பனைக்கும் எட்டாத கடவுளானவன்
கவலை என்ற மூன்றெழுத்தை வரவிடாதவன்
(நமச்சிவாயம்)
உலகமெல்லாம் சிவமயமே உணர்ந்து கொல்லுவீர்
உண்மையிது உண்மையிது புரிந்து கொள்ளுங்கள்
நலமனைத்தும் உங்களுக்கு சிவன் தருவாராம்
நம்பிக்கையாய் நாமிருந்தால் வரம் தருவாராம்
(நமச்சிவாயம்)
மாங்கனியை கணபதியாம் மகனிடம் ஈந்தார்
மால்மருகன் கோபத்தோடு மலையினைச் சேர்ந்தார்
தீங்கு வராதிருக்க அவன் திருப்பெயர் சொல்வோம்
சிவல்புரியார் பாடலினால் வாழ்கையை வெல்வோம்
(நமச்சிவாயம்)