திருப்புகழ்


நாத விந்துக லாதீ நமோ நம
வேத மந்த்ர சொரூபாநமோநம
ஞான பண்டித சாமீ நமோ நம வெகுகோடி

நாம சம்புகுமாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்த மயூரா நமோநம பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓதலுங்கண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பாத சேவையும் மறவாத

ஏழ்த லம்புதழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக வயலூரா

ஆத ரம்பியி லாரூ ராதோழமை
சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமானே