பரம்பொருளாய் ஆனவனே


அரோகரா அரோகரா அரகரோகரா
அரோகரா அரோகரா அரகரோகரா


எங்கும் நிறைந்தவனே அரகரோகரா.
பரம்பொருளாய் னவனே அரகரோகரா.
பார்வதியின் மைந்தனே அரகரோகரா.
பரமசிவன் புத்திரனே அரகரோகரா.

ஒருகை முகன் தம்பியே அரகரோகரா.
ஓம்கார நாயகனே அரகரோகரா.
வள்ளி மணாளனே அரகரோகரா.
தெய்வானைய மணம் புறிந்தத்வனே அரகரோகரா.

பழனி மலை அண்டவனே அரகரோகரா
பாவங்களை ஓட்டிடுவாய் அரகரோகரா
குன்றகுடியில் இருப்பவனே அரகரோகரா
குறைகள் எல்லாம் தீர்துவைப்பாய் அரகரோகரா

சிங்கையில் வீற்றிறுப்பவனே அரகரோகரா.
சிக்கல் எல்லாம் தீர்துவைப்பாய் அரகரோகரா.
ஆறுபடை வீட்டோனே அரகரோகரா.
ஆறுதலை அளித்துடுவாய் அரகரோகரா.

காவடிகள் ஏந்திவாரோம் அரகரோகரா.
கவலைகளை தீர்துவைப்பாய் அரகரோகரா.
பண்ணிசைத்து பாடிவறோம் அரகரோகரா
பெண்டுபிள்ளைகளை காத்திடுவாய் அரகரோகரா

அங்கே பாரு இங்ஙே பாரு அரகரோகரா.
முன்னே பாரு பின்னே பாரு அரகரோகரா.
எங்கே பார்த்தாளும் உந்தன் திருப்புகழயை
பாடி வர்றோம் அரகரோகரா.

அழகு திருநாவிற்கரசு, நாச்சியாபுறம்