வளரும் தமிழே சிவபாலா

வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா


வாவா முருகா வடிவேலா
வளரும் தமிழே சிவபாலா
கருணை பொழியும் கதிர்வேலா - எனைக்
காக்கும் துணையாய் வருவாயே

சக்திக் கனலாய் உருவாகி
சரவணப் பொய்கை மலராகிக்
கார்த்திகை பெண்கள் தாலாட்டக்
கருணை வடிவாய் வளர்ந்தவனே

தங்க ரதங்கள் கொண்டவனே
தரணி புகழும் ஆண்டவனே
சரவணபவ ஓம் மந்திரத்தில்
சகலமும் அடக்கி ஆள்பவனே

பஞ்சாமிர்தம் பன்னீரு
பாலுடன் தேனுடன் திருநீறு
சந்தனம் மணக்கும் உந்தன்மேனி
ஷ்ண்முகநாதா உன்புகழ் சொல்லும்

கால்நடை வருவோர் ஒருபக்கம்
காவடி சுமப்போர் மறுபக்கம்
இடுமபன் காவல் இப்பக்கம்
கடம்பன் காவல் எப்பக்கம்

அன்னை தந்த வேலடுத்து
அசுரர் குலத்தை அழித்தொழித்து
சேவலை மயிலை உன்னிடமாக
ஜெகமே புகழக் கொண்டவன் நீயே

தேவர் மூவர் சிறைமீட்டு
தெய்வானை கரம் பிடித்து
திருப்பரங்குன்றத் திருமணக்கோலம்
தினமும் காட்சி தருபவன் நீயே

பழமுதிர்ச் சோலை மரமாகிப்
பார்த்தவர் மயங்கும் கிழமாகி
வம்புக்கார வள்ளிப் பெண்ணின்
வளைக்கரம் பற்றிய பெருமான்நீயே

வள்ளியம்மை சடையப்பர்
வழங்கிய நல்ல மண்டபத்தில்
அள்ளித் தந்திடும் வள்ளல் முருகன்
ஆடுகின்றார் பொன் ஊஞ்சல்

செம்மட பட்டி ஊஞ்சலிலே
சின்ன குழந்தை வடிவேலன்
வண்ணப் பூக்கள் தொட்டுத்தழுவ
வடிவேலுடன் ஆடுகின்றான்

செம்மட பட்டி ஊஞ்சலிலே
ஜெகமே புகழும் உன்னழகை
கண்டால் போதும் கவலைதீரும்
கஷ்டம் எல்லம் ஓடுப்பொகும்

அண்ண மலையும் அகம்கிழ்ந்தே
அப்பா முருகா உனக்கென்றே
செய்து வைத்த வெள்ளிஊஞ்சல்
புள்ளி மயிலாய் ஆடுதய்யா

மழலைச் சிரிப்பு அழகோடு
மாதா தந்த வேலோடு
அழகிய ஊஞ்சல் ஆடிம்கிழ்ந்திடும்
ஆனந்த காட்சிக்கு ஈடே இல்லை

அய்யா என்றே பெருமையுடன்
அடியவர் வணங்கும் அருளாடி
அள்ளித் தந்திடும் திருநீற்றீல்
அப்பா உன்முகம் கண்டோமே

காவடி ஆடிடும் அழகினிலே
கலந்து நின்று சிரிப்பவனே
திருவடி சரணம் சரணமென்றே
தினமும் பணிவேன் நலந்தருவாயே

சந்தத் தமிழில் நான்பாட
ஷ்ண்முக நாதா வந்திடுவாய்
வந்தென் இல்லம் தங்கியிருந்தே
வளங்கள் எல்லாம் தருவாயப்பா

செய்யும் தொழில்கள் சிறந்திடவே
சிறப்புடன் வளங்கள் பெருகிடவே
தொட்ட தொழிலில் நட்டம் வராமல்
தொடர்ந்து லாபம் தருவாயப்பா

ஆடிடும் காவடி அழகினிலே
அற்புதம் காட்டும் வேலவனே
ஆடும்மயிலும் அற்புத வேலும்
உன்னுடன் காண வந்திடு முருகா

அன்ன தானம் செய்திடுவோம்
அப்பா உன்னைப் புகழ்ந்திடுவோம்
பண்ணை எல்லாம் செல்வம் கொழிக்க
பழம் நீ அப்பா வருவாயே

அப்பா முருகா என்போமே
ஆனந்த முருகா என்போமே
எப்பொழுதும் என்பக்கம் இருந்து
எல்லா நலமும் தருவாய்யப்பா

தங்கத் தேரில் பவனிவரும்
ஷ்ண்முக நாதன் திருமுகத்தைக்
கண்டால் போதும் கவலைதீரும்
கஷ்டம் எல்லாம் ஓடிப்போகும்

அருளிசைமணி அரு.சுப்பிரமணியன், நேமத்தான்பட்டி