தென்பரங்குன்றம்
அரோகரா
வேலாவா கந்தாவா குமரா வாவா
மெஞ்ஞானப் பொருளேவா மீனாள் ஈன்ற
பாலாவா எனது கலி துன்பம் தீர
பன்னிரண்டு கண்ணதனால் பார்க்க வாவா
சேலாடும் நயனவள்ளி பங்கா வாவா
திருமால் தன் மருகாவா சேவலாய் வாவா
ஆலாலம் உண்ட கண்டன் புதல்வா வாவா
அரகரா தென்பரங் குன்றையா போற்றி
வண்டாடும் மலர்சோலை உன்னதானால்
வள்ளியம்மை யெனையீன்ற தாயுமானாள்
தண்டாயுதம் உனது கையில் வேலுமானால்
தெய்வானை யெனை ஈன்ற தாயுமானாள்
கொண்டாடும் மாதுகுற வள்ளி தன்னை
கோலமணம் சூட்டிவைத்த குழந்தை யாண்டி
பண்டாரம் நீருமானால் என்னைக் காரும்
பச்சைமயில் வாகனரே பாதம் போற்றி.
ஈராறு காதிலே நான்சொன்ன மொழியெலாம்
யெள்ளளவும் கேட்கவிலையோ
இக்கலி யுகத்திலே பற்பல கிரியிலே
யென்னென்ன புதுமைசெய்தாய்
பாருலகில் பெரியமெய்ஞ் ஞானபண் டிதாவுந்தன்
பன்னிருகண் ணில்லையோசொல்
பாவையர்கள் மோகமாய் அருணகிரி செந்தமிழ்
பாட்டுமேல் நினைவுற்றவா
தீரனே பொற்கடக மணியுமணி மார்பனே
தேவர்பணி பொற்பாதனே
செட்டி மகனே தங்கக் கட்டி மணியே யிந்த
தந்திரம் செய்யலாமா
தீர வொய்யாரா செந்தூரா சங்கரா
சேவற் கொடிக்கதிபா
தேவர்சிறை மீட்டுஞ் செல்வாஎன் திருமுகம்
பார்த்தருள் தென்பரங் கிரிவேலனே!
அரோகரா
வேலாவா கந்தாவா குமரா வாவா
மெஞ்ஞானப் பொருளேவா மீனாள் ஈன்ற
பாலாவா எனது கலி துன்பம் தீர
பன்னிரண்டு கண்ணதனால் பார்க்க வாவா
சேலாடும் நயனவள்ளி பங்கா வாவா
திருமால் தன் மருகாவா சேவலாய் வாவா
ஆலாலம் உண்ட கண்டன் புதல்வா வாவா
அரகரா தென்பரங் குன்றையா போற்றி
வண்டாடும் மலர்சோலை உன்னதானால்
வள்ளியம்மை யெனையீன்ற தாயுமானாள்
தண்டாயுதம் உனது கையில் வேலுமானால்
தெய்வானை யெனை ஈன்ற தாயுமானாள்
கொண்டாடும் மாதுகுற வள்ளி தன்னை
கோலமணம் சூட்டிவைத்த குழந்தை யாண்டி
பண்டாரம் நீருமானால் என்னைக் காரும்
பச்சைமயில் வாகனரே பாதம் போற்றி.
ஈராறு காதிலே நான்சொன்ன மொழியெலாம்
யெள்ளளவும் கேட்கவிலையோ
இக்கலி யுகத்திலே பற்பல கிரியிலே
யென்னென்ன புதுமைசெய்தாய்
பாருலகில் பெரியமெய்ஞ் ஞானபண் டிதாவுந்தன்
பன்னிருகண் ணில்லையோசொல்
பாவையர்கள் மோகமாய் அருணகிரி செந்தமிழ்
பாட்டுமேல் நினைவுற்றவா
தீரனே பொற்கடக மணியுமணி மார்பனே
தேவர்பணி பொற்பாதனே
செட்டி மகனே தங்கக் கட்டி மணியே யிந்த
தந்திரம் செய்யலாமா
தீர வொய்யாரா செந்தூரா சங்கரா
சேவற் கொடிக்கதிபா
தேவர்சிறை மீட்டுஞ் செல்வாஎன் திருமுகம்
பார்த்தருள் தென்பரங் கிரிவேலனே!