மங்களம் அனைத்தையும் தந்தருளும் அப்பனே
மகிமைமிகும் என் ஐயனே
வாசித்து நேசித்து பூஜித்து வருவோரை
வாழ்வித்து வரும் ஈசனே,... கணேசனே
சங்கர சதாசிவ சடாதரன் மைந்தனே
சக்தி சிவகாமி மைந்தனே
தன்னடி பணிந்தாரை தலைமேல் சுமந்தருளும்
தையவுடைய மகாராசனே... கணேசனே
இங்கு நான் உன்னையே துணையாக நம்பினேன்
எனது குறையாவும் தீர்ப்பாய்
இப்போதும் எப்போதும் தப்பேதும் வாராமல்
என்னை நீ காத்து அருள்வாய்... கணேசனே
பங்கய வயல்சூழும் பிள்ளையார்பட்டி
வளர் பரம கருணா மூர்த்தியே
பதினாறு பேறுகளும் அடியேனும்
பெறுமாறு பாலித்தருள் வாழ்த்தியே... கணேசனே
மகிமைமிகும் என் ஐயனே
வாசித்து நேசித்து பூஜித்து வருவோரை
வாழ்வித்து வரும் ஈசனே,... கணேசனே
சங்கர சதாசிவ சடாதரன் மைந்தனே
சக்தி சிவகாமி மைந்தனே
தன்னடி பணிந்தாரை தலைமேல் சுமந்தருளும்
தையவுடைய மகாராசனே... கணேசனே
இங்கு நான் உன்னையே துணையாக நம்பினேன்
எனது குறையாவும் தீர்ப்பாய்
இப்போதும் எப்போதும் தப்பேதும் வாராமல்
என்னை நீ காத்து அருள்வாய்... கணேசனே
பங்கய வயல்சூழும் பிள்ளையார்பட்டி
வளர் பரம கருணா மூர்த்தியே
பதினாறு பேறுகளும் அடியேனும்
பெறுமாறு பாலித்தருள் வாழ்த்தியே... கணேசனே