கற்பகமூர்த்தி அய்யா கற்பகமூர்த்தி - எங்கள் 
கனவுகளை நனவாக்கும் கற்பகமூர்த்தி 

கற்பகமூர்த்தி அய்யா கற்பகமூர்த்தி - எங்கள்
கனவுகளை நனவாக்கும் கற்பகமூர்த்தி
அற்புதமாய் வீற்றிருக்கும் கற்பகமூர்த்தி - உன்னை
அனுதினமும் தொழுதிடுவோம் கற்பகமூர்த்தி


செந்திலுக்கு மூத்தவனே கற்பகமூர்த்தி - அந்த
சிவபெருமான் பெற்றவனே கற்பகமூர்த்தி
வந்தவர்கள் அனைவருக்கும் கற்பகமூர்த்தி - நல்ல
வரம் கொடுப்பாய் நலம்கொடுப்பாய்  கற்பகமூர்த்தி


ஆனைவடிவானவனே கற்பகமூர்த்தி - நல்ல
அருகம்புல் ஏற்பவனே கற்பகமூர்த்தி
பானை வயிறானவனே கற்பகமூர்த்தி - அந்த
பரமனுக்கு திருமகனே கற்பகமூர்த்தி


சந்தனத்தில் மணம்கமழும் கற்பகமூர்த்தி - நல்ல
சதுர்த்தியிலே வரம்கொடுப்பாய் கற்பகமூர்த்தி
மந்திரத்தில் ஓம் வடிவம் கற்பகமூர்த்தி -உனை
மறவாமல் போற்றிடுவோம் கற்பகமூர்த்தி


மூஷிகத்தில் ஏறிவரும் கற்பகமூர்த்தி - நீயும்
மோதகத்தில் பிரியம் வைத்தாய் கறபகமூர்த்தி
ஆசையுடன் உனைத்தொழுதோம் கற்பகமூர்த்தி - நீயும்
அருள் தருவாய் பொருள் தருவாய் கற்பகமூர்த்தி