எந்நாளும் காப்பாயம்மா
ஸ்ரீராஜ ஸ்ரீராஜ ராஜேஸ்வரி
சிவசக்திவடிவான ராஜேஸ்வரி
ஸ்ரீசக்ர வாசினி சிம்மாசனி
சிவசக்தி ரூபிணி கல்யாணிநீ
ஓம்சக்தி ஸ்ரீராஜ ராஜேஸ்வரி
உன்பாதம் சரணடைந்தேன் மகேஸ்வரி
இருகைகளால் தொடுத்த பூமாலைகள்
இதயத்தினால் தொடுத்த பாமாலைகள்
அருள்பொங்கும் தீபங்கள் ஏற்பாயம்மா
அடியேனை எந்நாளும் காப்பாயம்மா!
அம்மாஎன் இல்லத்தில் அடியெடுத்துவா
அழகான வெண்கொற்றக் குடைபிடித்துவா
சும்மாநீ வரலாமோ பகைமுடித்துவா
துயரங்கள் யாவினுக்கும் விடைகொடுத்துவா!
செந்தா மரைப் பூவில் ஸ்ரீதேவியாம்
சிங்கத்தில் ஏறிவந்தால் மாகாளியாம்
வெண்தா மரைப்பூவில் மகராணியாம்
விண்ணோடும் மண்ணாளும் கலைவாணியாம்!
தீர்த்தங்கள் அத்தனையும் கமலாலயம்
தீபம் தெரிந்தஇடம் அருணாசலம்
வாய்த்த சபைகள்எல்லாம் பொன்னம்பலம்
மாதா பராசக்தி நீஎன்பலம்!
தாய்நீ மனம்வைத்தால் தங்கம்வரும்
தனிவழிக்குத் துணையாகச் சிங்கம்வரும்
சேய்வீட்டில் கல்யாண மேளம்வரும்
திருநாட்டை அரசாளும் யோகம்வரும்!
-அருட்கவி கு.செ.இராமசாமி
ஸ்ரீராஜ ஸ்ரீராஜ ராஜேஸ்வரி
சிவசக்திவடிவான ராஜேஸ்வரி
ஸ்ரீசக்ர வாசினி சிம்மாசனி
சிவசக்தி ரூபிணி கல்யாணிநீ
ஓம்சக்தி ஸ்ரீராஜ ராஜேஸ்வரி
உன்பாதம் சரணடைந்தேன் மகேஸ்வரி
இருகைகளால் தொடுத்த பூமாலைகள்
இதயத்தினால் தொடுத்த பாமாலைகள்
அருள்பொங்கும் தீபங்கள் ஏற்பாயம்மா
அடியேனை எந்நாளும் காப்பாயம்மா!
அம்மாஎன் இல்லத்தில் அடியெடுத்துவா
அழகான வெண்கொற்றக் குடைபிடித்துவா
சும்மாநீ வரலாமோ பகைமுடித்துவா
துயரங்கள் யாவினுக்கும் விடைகொடுத்துவா!
செந்தா மரைப் பூவில் ஸ்ரீதேவியாம்
சிங்கத்தில் ஏறிவந்தால் மாகாளியாம்
வெண்தா மரைப்பூவில் மகராணியாம்
விண்ணோடும் மண்ணாளும் கலைவாணியாம்!
தீர்த்தங்கள் அத்தனையும் கமலாலயம்
தீபம் தெரிந்தஇடம் அருணாசலம்
வாய்த்த சபைகள்எல்லாம் பொன்னம்பலம்
மாதா பராசக்தி நீஎன்பலம்!
தாய்நீ மனம்வைத்தால் தங்கம்வரும்
தனிவழிக்குத் துணையாகச் சிங்கம்வரும்
சேய்வீட்டில் கல்யாண மேளம்வரும்
திருநாட்டை அரசாளும் யோகம்வரும்!
-அருட்கவி கு.செ.இராமசாமி