மங்கலநாயகி ஒன்பது கோயிலில்
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
வஞ்சிசிவ காமவல்லி வாடா மலர்மங்கை
வளர்பிள்ளை யார்பட் டியிலே
மாத்தூரில் பெரியநாயகி மாதுசிவ புரந்தேவி
வளர்இரணிக் கோயில் தனிலே
மஞ்சளணி ஆவுடையாள் மலர்சூரக்குடியதனில்
வளர்வேலங் குடிகா மாக்ஷி
மாயிலுப்பைக் குடியோடு நேமத்தில் சௌந்திர
நாயகியாய் ஒளிரும் மலரே
கொஞ்சுமெழில் இளையாற்றங் குடிநித்ய கல்யாணி
குவலயங் காக்குந் தலைவி
கூடுமெழில் வயிரவன் கோயிலமர் வடிவுடையாள்
குலமாதர் போற்றும் இறைவி
விஞ்சுபுகழ் நகரத்தார் வியனொன்பது கோயிலில்
கொஞ்சிவரும் சக்தி மயிலே
அஞ்செழுத்து நாயகனின் நெஞ்சைவிட் டகலாத
அன்னபூரணி உமையே!
-தேவகோட்டை மீயன்னா சேவுகன்செட்டி
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
வஞ்சிசிவ காமவல்லி வாடா மலர்மங்கை
வளர்பிள்ளை யார்பட் டியிலே
மாத்தூரில் பெரியநாயகி மாதுசிவ புரந்தேவி
வளர்இரணிக் கோயில் தனிலே
மஞ்சளணி ஆவுடையாள் மலர்சூரக்குடியதனில்
வளர்வேலங் குடிகா மாக்ஷி
மாயிலுப்பைக் குடியோடு நேமத்தில் சௌந்திர
நாயகியாய் ஒளிரும் மலரே
கொஞ்சுமெழில் இளையாற்றங் குடிநித்ய கல்யாணி
குவலயங் காக்குந் தலைவி
கூடுமெழில் வயிரவன் கோயிலமர் வடிவுடையாள்
குலமாதர் போற்றும் இறைவி
விஞ்சுபுகழ் நகரத்தார் வியனொன்பது கோயிலில்
கொஞ்சிவரும் சக்தி மயிலே
அஞ்செழுத்து நாயகனின் நெஞ்சைவிட் டகலாத
அன்னபூரணி உமையே!
-தேவகோட்டை மீயன்னா சேவுகன்செட்டி