தயை புரிந்தே எனை வாழவைப்பாய்

உறவை மறந்தாலும் உணவை மறந்தாலும்
உன்னை நான் மறப்பதில்லை.
கனவிலும் நீயே நினைவிலும் நீயே
கருணை செய்வாயே ஞானக்ஷச்.


என் உடல் உயிர்யாவும் உனதல்லவா
நான் உலகினில் வாழ்வதுன் செயலல்லவா
கண்ணில் வழிந்தோடும் நீர்துடைத்து எனைக்
காத்தருள் செய்வதுன் கடனல்லவா (உறவை)

வேதனையோ இன்னும் தீரவில்லை அம்மா
வேறொரு வழியும் தெரியவில்லை
தரவோ டென்னை காத்தருள்வாய் அம்மா
அருள்புரிந்தே யெனை தரிப்பாய் (உறவை)

பிஞ்சுமனம் எந்தன் பேதைமனம் உனைப்
பிரிய நினைக்காத வெள்ளைமனம்
தஞ்சமென்றே நான் உனை அடைந்தேன்
தயைபுரிந்தே எனை வாழவைப்பாய் (உறவை)


தேவகோட்டை லெ.சோமு.