கரந்தமலை என்னும் பரநாச்சி தாயே!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
கருங்குளம் தேவியே உனைப்பாட எனதனுக்குக்
கள்ளமில்லா நெஞ்சம் வேண்டும்
காலமும் நும்புகழ் மறவாது நினைக்கின்ற
கனிவான உள்ளம் வேண்டும்
திருவொடு புகழொடு நான்வாழ உந்தனின்
திருவருள் எனக்கு வேண்டும்
தீராத நோயெல்லாம் தீர்த்திடும் சக்த்தியே
தினமெம்மை நோக்க வேண்டும் 1
கரந்தமலை எனும்பெயரில் கருங்குளம் வந்திட்ட
பரநாச்சி என்னும் தாயே
கரத்தினில் ஏந்திட்ட தீவெட்டி விளக்கினைக்
கனிந்துநீ ஏற்று நின்றாய்
விஸ்த்தார மண்டபம் பக்தருக்கு வழங்கிநீ
விளாரிமார் வீடு கேட்டாய்
விரதாமாய் இருந்தவர் கொணர்ந்திடும் விளாரியே
விருப்பாமாய் இருக்குதென்றாய் 2
ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாக் கொண்டாட
ஆசையாய் இருக்கு தென்றார்
ஈராண்டுக் கொருமுறை எனையெண்ணிக் கொண்டாடு
இதுபோதும் எனக்கு என்றாய்
ஈரவுடை கட்டியே வருவோரைக் கானவே
இன்பமாய் இருக்கு தென்றாய்
இளந்தேகாய் உடைத்ததனை வெறுவாயில் தின்பதையே
இனிமையாய் வேண்டி நின்றாய் 3
உன்பெயரைச் சொன்னவர்கள் ஒருநாளும் குறையாமல்
உயர்வாக வாழ்ந்து நிற்பார்
நம்பியவர் இல்லங்களில் நாள்தேறும் வந்திருந்து
நலமாக வாழ வைப்பாய்
எம்மனை சிறக்கவும் எழிலோடு விளங்கவும்
இதமாக எம்மை ஆள்வாய்
அம்பிகையே பராநாச்சி என்றாலே ஓடிவந்து
அழகான வார்த்தை சொல்லுவாய். 4
குழந்தகள் மனையிலே கொஞ்சியே வளர்ந்திடக்
கோடியாய் நன்மை அருள்வாய்
குறைவற்ற செல்வங்கள் குவலயம் போற்றவே
கூறிய மதியைத் தருவாய்
அழகோடும் அறிவோடும் அவர்வாழ்வு சிறக்கவே
அனபான ஆசி தருவாய்
அளவோடு வளர்ந்தபின் திருமணம் நடத்தவே
அன்பாய் நீஉதவ வருவாய் 5
மஞ்சளுடன் குங்குமம் வேண்டியே நினைக்கிறேன்
மங்களமாய் அள்ளித் தருவாய்
தஞ்சமென்று உனையடைந்த தகமைநிலை சிறக்கவே
தரணியில் வாழவைப்பாய்
விஞ்சுகிற மனக்கவலை விலகிட வேண்டுகிறேன்
விரைவினில் தீர்த்து வைப்பாய்
அஞ்சுகிற நெஞ்சோடு அடிபணிந்து கேட்கின்றேன்
நீ ஆதாரமாக வருவாய் 6
சத்தியத்தின் தேவியே இத்தரையில் நான்வாழ
இனியதுணை யாக வருவாய்
உத்தமனாய் என்றென்றும் வாழ்ந்திடவே நீயெனக்கு
உற்றதுனை யாக வருவாய்
இத்தரையில் மட்டுமின்றி எங்கெங்கு சென்றாலும்
இனியபுக ழாக வருவாய்
வித்தைகள் பலகற்று வீரனாய் விளங்கிட
வேண்டிய வரங் கள்ருள்வாய் 7
கானகம் வாழ்ந்தாலும் குலவையொலி கேட்டதுமே
கலகலென ஓடு வருவாய்
தேனான மொழிபாடிச் சிறப்பாக கும்மியிட
தேவிஎனக் கருள வேண்டும்
தானானை கொட்டியே தரிசிக்க வருவோர்க்கு
தனந்தனை அளிக்க வேண்டும்
தினமுன்னை நினைபோர்க்குப் பணமாக நீயிருந்து
பலமான வாழ்வு தருவாய் 8
பல்லக்கில் ஏறிநீ பட்டணம் வருகையில்
பார்த்துவர மளிக்க வேண்டும்
மதலைகள் பின்வர மகிழ்ந்துநீ வருகையில்
மனைகளைக் காண வேண்டும்
பானக்கம் நீர்மோரு பருகிஉனை நினக்கையில்
பக்கத் துணை யாக வரவேண்டும்
சுண்டலும் மாங்காயும் சுவைத்துஉனை பார்க்கையில்
நீசுந்தர மாக வேண்டும் 9
தொழில்தனைச் செய்வோர்க்குத் தொடராக வந்திருந்து
சோராது வாழ வைப்பாய்
அழியாத உள்ளதை அனைவருக்கும் நீயளித்து
அகலாது நின்று காப்பாய்
செழிப்பான வயல்நடுவில் சிரிப்பாக நீயிருந்து
சீராக வாழவைப்பாய்
பொழிவதனை எதிர்நோக்கும் பொன்னான காலத்தைப்
பொலிவோடு கூட்டு விப்பாய் 10
புலவர் சாந்தா - கவிமணி, கல்லல்
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
கருங்குளம் தேவியே உனைப்பாட எனதனுக்குக்
கள்ளமில்லா நெஞ்சம் வேண்டும்
காலமும் நும்புகழ் மறவாது நினைக்கின்ற
கனிவான உள்ளம் வேண்டும்
திருவொடு புகழொடு நான்வாழ உந்தனின்
திருவருள் எனக்கு வேண்டும்
தீராத நோயெல்லாம் தீர்த்திடும் சக்த்தியே
தினமெம்மை நோக்க வேண்டும் 1
கரந்தமலை எனும்பெயரில் கருங்குளம் வந்திட்ட
பரநாச்சி என்னும் தாயே
கரத்தினில் ஏந்திட்ட தீவெட்டி விளக்கினைக்
கனிந்துநீ ஏற்று நின்றாய்
விஸ்த்தார மண்டபம் பக்தருக்கு வழங்கிநீ
விளாரிமார் வீடு கேட்டாய்
விரதாமாய் இருந்தவர் கொணர்ந்திடும் விளாரியே
விருப்பாமாய் இருக்குதென்றாய் 2
ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாக் கொண்டாட
ஆசையாய் இருக்கு தென்றார்
ஈராண்டுக் கொருமுறை எனையெண்ணிக் கொண்டாடு
இதுபோதும் எனக்கு என்றாய்
ஈரவுடை கட்டியே வருவோரைக் கானவே
இன்பமாய் இருக்கு தென்றாய்
இளந்தேகாய் உடைத்ததனை வெறுவாயில் தின்பதையே
இனிமையாய் வேண்டி நின்றாய் 3
உன்பெயரைச் சொன்னவர்கள் ஒருநாளும் குறையாமல்
உயர்வாக வாழ்ந்து நிற்பார்
நம்பியவர் இல்லங்களில் நாள்தேறும் வந்திருந்து
நலமாக வாழ வைப்பாய்
எம்மனை சிறக்கவும் எழிலோடு விளங்கவும்
இதமாக எம்மை ஆள்வாய்
அம்பிகையே பராநாச்சி என்றாலே ஓடிவந்து
அழகான வார்த்தை சொல்லுவாய். 4
குழந்தகள் மனையிலே கொஞ்சியே வளர்ந்திடக்
கோடியாய் நன்மை அருள்வாய்
குறைவற்ற செல்வங்கள் குவலயம் போற்றவே
கூறிய மதியைத் தருவாய்
அழகோடும் அறிவோடும் அவர்வாழ்வு சிறக்கவே
அனபான ஆசி தருவாய்
அளவோடு வளர்ந்தபின் திருமணம் நடத்தவே
அன்பாய் நீஉதவ வருவாய் 5
மஞ்சளுடன் குங்குமம் வேண்டியே நினைக்கிறேன்
மங்களமாய் அள்ளித் தருவாய்
தஞ்சமென்று உனையடைந்த தகமைநிலை சிறக்கவே
தரணியில் வாழவைப்பாய்
விஞ்சுகிற மனக்கவலை விலகிட வேண்டுகிறேன்
விரைவினில் தீர்த்து வைப்பாய்
அஞ்சுகிற நெஞ்சோடு அடிபணிந்து கேட்கின்றேன்
நீ ஆதாரமாக வருவாய் 6
சத்தியத்தின் தேவியே இத்தரையில் நான்வாழ
இனியதுணை யாக வருவாய்
உத்தமனாய் என்றென்றும் வாழ்ந்திடவே நீயெனக்கு
உற்றதுனை யாக வருவாய்
இத்தரையில் மட்டுமின்றி எங்கெங்கு சென்றாலும்
இனியபுக ழாக வருவாய்
வித்தைகள் பலகற்று வீரனாய் விளங்கிட
வேண்டிய வரங் கள்ருள்வாய் 7
கானகம் வாழ்ந்தாலும் குலவையொலி கேட்டதுமே
கலகலென ஓடு வருவாய்
தேனான மொழிபாடிச் சிறப்பாக கும்மியிட
தேவிஎனக் கருள வேண்டும்
தானானை கொட்டியே தரிசிக்க வருவோர்க்கு
தனந்தனை அளிக்க வேண்டும்
தினமுன்னை நினைபோர்க்குப் பணமாக நீயிருந்து
பலமான வாழ்வு தருவாய் 8
பல்லக்கில் ஏறிநீ பட்டணம் வருகையில்
பார்த்துவர மளிக்க வேண்டும்
மதலைகள் பின்வர மகிழ்ந்துநீ வருகையில்
மனைகளைக் காண வேண்டும்
பானக்கம் நீர்மோரு பருகிஉனை நினக்கையில்
பக்கத் துணை யாக வரவேண்டும்
சுண்டலும் மாங்காயும் சுவைத்துஉனை பார்க்கையில்
நீசுந்தர மாக வேண்டும் 9
தொழில்தனைச் செய்வோர்க்குத் தொடராக வந்திருந்து
சோராது வாழ வைப்பாய்
அழியாத உள்ளதை அனைவருக்கும் நீயளித்து
அகலாது நின்று காப்பாய்
செழிப்பான வயல்நடுவில் சிரிப்பாக நீயிருந்து
சீராக வாழவைப்பாய்
பொழிவதனை எதிர்நோக்கும் பொன்னான காலத்தைப்
பொலிவோடு கூட்டு விப்பாய் 10
புலவர் சாந்தா - கவிமணி, கல்லல்