ஆதிபராசக்தி

ஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீ
தேவிபராசக்தி உன்னைத் தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்


காஞ்சியிலே நீ காமாட்சி காசியிலே நீ சாலாட்சி
மதுரையிலே நீ மீனாட்சி தில்லையிலேதான் தனியாட்சி

ஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீ
தேவிபராசக்தி உன்னைத் தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்

எல்லையில்லா தொல்லைகளும் தில்லை வந்தால் தொலைந்துவிடும்
எல்லைக்காளி சக்தியம்மா தில்லைக்காளி வாடியம்மா

ஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீ
தேவிபராசக்தி உன்னைத் தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்

ஆனைமுகனின் அன்னையம்மா அறுமுகனும் உன் பிள்ளையம்மா
சுடலைநாதனில் பாதியம்மா சுடலையிலே முழு ஜோதியம்மா

ஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீ
தேவிபராசக்தி உன்னைத் தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்

காட்டுத்தீயில் காளியம்மா வீட்டுத்தீயில் தீபமம்மா
ஏற்றித்தொழுவோர் யாவரையும் போற்றிக்காப்பாய் சக்தியடி

ஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீ
தேவிபராசக்தி உன்னைத் தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்

வேப்பிலையில் நீ மாரியடி கருவேப்பிலையில் நல்வாசமடி
விருந்தினருக்கு அன்னமடி நெருங்கினவர்க்கு தாயுமடி

ஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீ
தேவிபராசக்தி உன்னைத் தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்
அம்மா தேடி சரண் அடைந்தோம்