செந்தில் வளர் கந்தன்
முருகா முருகா வேல்முருகா
முருகா முருகா வேல்முருகா
சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்
செந்தில் வளர் கந்தனிடம் தூதுவிடுத்தேன்
அந்தமிகு குகன்நெஞ்சில் இடம் பிடித்தேன்
ஆறுமுகம் பேரழகைப் படம் பிடித்தேன்(முருகா)
வண்ணமயில் வாகனத்தில் வேல் முருகன்
வள்ளி தெய்வயானையுடன் மால் மருகன்
தென்னகத்தில் வாழுகின்ற சிலையழகன்
என்னகத்தில் காட்சிதந்தான் கலை அழகன்(முருகா)
வெண்ணீறு நெற்றியிலே பளபளக்க
வெண்ணிலவு கண்களிலே சிலுசிலுக்க
பன்னீரும் மார்பினிலே கமகமக்க
பார்வதியின் பாலன் வந்தான் மனம் களிக்க(முருகா)
ஓராறு முகம் கண்டேன் உள மகிழ்ந்தேன்
ஈராறு விழி கண்டேன் எனை மறந்தேன்
சீராளன் உருக்கண்டேன் செயலிழந்தேன்
செந்தாமரைப் பதத்தில் சரணடைந்தேன்(முருகா)
முருகா என அழைத்தேன் முறுவல் கண்டேன்
குமரா என அழைத்தேன் குளுமை கொண்டேன்
கந்தா என அழைத்தேன்கனிந்து நின்றான்
கடம்பா என அழைத்தேன்கருணை கொண்டான்(முருகா)
பழநி பரங்குன்றம் திருச்செந்தூர்
பழமுதிர் சோலையுடன் சுவாமி மலை
அழகிய திருத்தணிகை மருதமலை
ஆலயங்கள் யாவையும் காட்டுவித்தான்(முருகா)
-அ. மருதகாசி
முருகா முருகா வேல்முருகா
முருகா முருகா வேல்முருகா
சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்
செந்தில் வளர் கந்தனிடம் தூதுவிடுத்தேன்
அந்தமிகு குகன்நெஞ்சில் இடம் பிடித்தேன்
ஆறுமுகம் பேரழகைப் படம் பிடித்தேன்(முருகா)
வண்ணமயில் வாகனத்தில் வேல் முருகன்
வள்ளி தெய்வயானையுடன் மால் மருகன்
தென்னகத்தில் வாழுகின்ற சிலையழகன்
என்னகத்தில் காட்சிதந்தான் கலை அழகன்(முருகா)
வெண்ணீறு நெற்றியிலே பளபளக்க
வெண்ணிலவு கண்களிலே சிலுசிலுக்க
பன்னீரும் மார்பினிலே கமகமக்க
பார்வதியின் பாலன் வந்தான் மனம் களிக்க(முருகா)
ஓராறு முகம் கண்டேன் உள மகிழ்ந்தேன்
ஈராறு விழி கண்டேன் எனை மறந்தேன்
சீராளன் உருக்கண்டேன் செயலிழந்தேன்
செந்தாமரைப் பதத்தில் சரணடைந்தேன்(முருகா)
முருகா என அழைத்தேன் முறுவல் கண்டேன்
குமரா என அழைத்தேன் குளுமை கொண்டேன்
கந்தா என அழைத்தேன்கனிந்து நின்றான்
கடம்பா என அழைத்தேன்கருணை கொண்டான்(முருகா)
பழநி பரங்குன்றம் திருச்செந்தூர்
பழமுதிர் சோலையுடன் சுவாமி மலை
அழகிய திருத்தணிகை மருதமலை
ஆலயங்கள் யாவையும் காட்டுவித்தான்(முருகா)
-அ. மருதகாசி