நலம் தரும் நாயகன்
தென்பழனி ஆலயம் தேவதேவன் கோபுரம்
அன்பழகன் சந்நிதியில் வைபோகம் - அவன்
அடியார்கள் கொண்டாடும் தைப்பூசம்
ஆறெழுத்து மந்திரம் அங்கமெல்லாம் சந்தனம்
நீறெடுத்துப் பூசிவரும் திருக்கூட்டம் - அதன்
நெஞ்சமதில் ஆடிவரும் சதிராட்டம்
ஆலவட்டம் தோரணம் அன்னதானம் பானகம்
காலெடுத்து வைக்க வைக்க உபசாரம் - இது
கந்தவேலன் தண்டபாணி தரும்யோகம்
வேல்முருகன் சேவடி வேண்டிவரும் காவடி
பால்குடங்கள் பன்னீரும் அபிஷேகம் வண்ணப்
பட்டாடை நவரத்ன அலங்காரம்
கற்பூர தீபமாம் கண்கவரும் ரூபமாம்
தற்பரனாய் நிற்பவனே நம்தெய்வமாம் - அந்த
சரவணனைப் பாடுவதே பேரின்பமாம்
பழனிமலை வாசனை பஞ்சாமிர்த நேசனே
அழகுமயில் வாகனத்தில் வருவாயப்பா எங்கள்
அல்லல்களைப் போக்கி நலம் தருவாயப்பா
ஆறுபடை வீடுகள் அழகுமலை நாடுகள்
ஏறுமயில் ஏறுபவன் அரசாங்கமாம் அவன்
இசைபாடி ஆடுபவர் புகழோங்குமாம்
தேவயானை திருமணம் தேவர்தரும் சீதனம்
பாவாணன் நக்கீரன் அருட்கவிமன்றம் முதல்
படைவீடு மதுரையிலே திருப்பரங்குன்றம்
வடிவேலை வீசுவான் வாகைமலர் சூடுவான்
அடியார்கள் புலவோர்கள் நெஞ்சில் வாழ்பவன் அவன்
அலையாடும் கடலோரம் செந்தில் ஆண்டவன்
தண்டாயுதம் ஏந்துவான் ஜபமாலை தாங்குவான்
கொண்டாடும் கவிமாலை அடிசூடுவான் எழில்
கூத்தாடும் பழநியிலே குடியேறுவான்
சிவஞான சுந்தரம் செவியோடு மந்திரம்
உபதேசக் குருநாதன் சாமிநாதன் அவன்
உலகாளும் சக்தி சிவ காமிபாலன்
அடிவாரம் மாமனாம் மலைமேலே மருகனாம்
இடையினிலே ரகுராமன் உறவினர்சேனை அது
எம்பெருமாள் விளையாடும் பழமுதிர்சோலை
வள்ளிமலை வடமலை மருதமலை சிவமலை
கொல்லிமலை பொதிகைமலை பற்பலமலைகள் ஐயா
குமரமலை தணிகை மலை கற்பகச்சுனைகள்
தண்ணீர்மலை முருகனே தைப்பிங்கில் குமரனே
கண்ணபிரான் மருமகனே கதிர்காமனே ஏழு
கடல்தாண்டி லண்டனிலே சிவபாலனே
போதுமய்யா சோதனை பொறுக்கவில்லை வேதனை
ஆதரித்துக் காப்பாற்றத் தாமதமேனோ என்
அல்லல்வினை நோய்உனக்குச் சம்மதம்தானோ
ஆறுமுக வேலனே அழகுமயில் வீரனே
ஏறுமுகம் நீதருவாய் பழநி மலையிலே இனி
எப்போதும் துணைவருவாய் எது வழியிலே
வைத்தீசன் மைந்தனே வயலூரில் கந்தனே
தைப்பூசம் காணவந்தோம் தண்டபானிநீ
தங்கரதம் ஏறவேண்டும் எங்கள்சாமி
அருணகிரி தோழனே அடியவர்சகாயனே
சரணம் உன்னை அன்றி இல்லை சண்முகநாதா துணை
தந்துமனை மக்கள்சுற்றம் எம்குலம்நீகா
-அருட்கவி கு. செ. இராமசாமி
தென்பழனி ஆலயம் தேவதேவன் கோபுரம்
அன்பழகன் சந்நிதியில் வைபோகம் - அவன்
அடியார்கள் கொண்டாடும் தைப்பூசம்
ஆறெழுத்து மந்திரம் அங்கமெல்லாம் சந்தனம்
நீறெடுத்துப் பூசிவரும் திருக்கூட்டம் - அதன்
நெஞ்சமதில் ஆடிவரும் சதிராட்டம்
ஆலவட்டம் தோரணம் அன்னதானம் பானகம்
காலெடுத்து வைக்க வைக்க உபசாரம் - இது
கந்தவேலன் தண்டபாணி தரும்யோகம்
வேல்முருகன் சேவடி வேண்டிவரும் காவடி
பால்குடங்கள் பன்னீரும் அபிஷேகம் வண்ணப்
பட்டாடை நவரத்ன அலங்காரம்
கற்பூர தீபமாம் கண்கவரும் ரூபமாம்
தற்பரனாய் நிற்பவனே நம்தெய்வமாம் - அந்த
சரவணனைப் பாடுவதே பேரின்பமாம்
பழனிமலை வாசனை பஞ்சாமிர்த நேசனே
அழகுமயில் வாகனத்தில் வருவாயப்பா எங்கள்
அல்லல்களைப் போக்கி நலம் தருவாயப்பா
ஆறுபடை வீடுகள் அழகுமலை நாடுகள்
ஏறுமயில் ஏறுபவன் அரசாங்கமாம் அவன்
இசைபாடி ஆடுபவர் புகழோங்குமாம்
தேவயானை திருமணம் தேவர்தரும் சீதனம்
பாவாணன் நக்கீரன் அருட்கவிமன்றம் முதல்
படைவீடு மதுரையிலே திருப்பரங்குன்றம்
வடிவேலை வீசுவான் வாகைமலர் சூடுவான்
அடியார்கள் புலவோர்கள் நெஞ்சில் வாழ்பவன் அவன்
அலையாடும் கடலோரம் செந்தில் ஆண்டவன்
தண்டாயுதம் ஏந்துவான் ஜபமாலை தாங்குவான்
கொண்டாடும் கவிமாலை அடிசூடுவான் எழில்
கூத்தாடும் பழநியிலே குடியேறுவான்
சிவஞான சுந்தரம் செவியோடு மந்திரம்
உபதேசக் குருநாதன் சாமிநாதன் அவன்
உலகாளும் சக்தி சிவ காமிபாலன்
அடிவாரம் மாமனாம் மலைமேலே மருகனாம்
இடையினிலே ரகுராமன் உறவினர்சேனை அது
எம்பெருமாள் விளையாடும் பழமுதிர்சோலை
வள்ளிமலை வடமலை மருதமலை சிவமலை
கொல்லிமலை பொதிகைமலை பற்பலமலைகள் ஐயா
குமரமலை தணிகை மலை கற்பகச்சுனைகள்
தண்ணீர்மலை முருகனே தைப்பிங்கில் குமரனே
கண்ணபிரான் மருமகனே கதிர்காமனே ஏழு
கடல்தாண்டி லண்டனிலே சிவபாலனே
போதுமய்யா சோதனை பொறுக்கவில்லை வேதனை
ஆதரித்துக் காப்பாற்றத் தாமதமேனோ என்
அல்லல்வினை நோய்உனக்குச் சம்மதம்தானோ
ஆறுமுக வேலனே அழகுமயில் வீரனே
ஏறுமுகம் நீதருவாய் பழநி மலையிலே இனி
எப்போதும் துணைவருவாய் எது வழியிலே
வைத்தீசன் மைந்தனே வயலூரில் கந்தனே
தைப்பூசம் காணவந்தோம் தண்டபானிநீ
தங்கரதம் ஏறவேண்டும் எங்கள்சாமி
அருணகிரி தோழனே அடியவர்சகாயனே
சரணம் உன்னை அன்றி இல்லை சண்முகநாதா துணை
தந்துமனை மக்கள்சுற்றம் எம்குலம்நீகா
-அருட்கவி கு. செ. இராமசாமி