ஆறுபடை வீடு

திருத்தணி முருகன் நமக்கு வழித்துணை வருவான்
வருத்தத்தைப் போக்க நல்ல வழிகளைத் தருவான்


திருத்தணி முருகன் நமக்கு வழித்துணை வருவான்
வருத்தத்தைப் போக்க நல்ல வழிகளைத் தருவான்
புள்ளி மயிலேறிக் குறவள்ளி மயிலோடு
துள்ளித் துள்ளி குதிப்பான்நம் தொல்லைகளை அழிப்பான்

பூமிமலைகளிலே சிறந்தது சாமி மலை அய்யா
சாமி மலை மேலே குரு சாமி இருக்காராம்
காட்டும் அன்பாலே நாம் கேட்கும் வரம் தருவான்
கேட்டபடி தருவான் நாம் நினைத்தபடி வருவான்

என்று வருவானோ பரங் குன்றின் வடிவேலன்
அன்னை வயிற்றினிலே நானும் சின்ன உருவெடுத்து
உன்னை நினைத்தேனே நீயும் என்னை நினைப்பாயோ
என்று வருவாயோ என்றன் துன்பம் தவிர்ப்பாயோ

அஞ்சு வயதினிலே என்றன் பிஞ்சுக் கரத்தினிலே
செந்தூர் கடலோராம் வந்து சீரலை தொட்டேனேன்
அந்த முகம் பாரும் செந்தூர் ஆறுமுகசாமி
என்றன் துயர்போக்கப் நீயும் வழிகொஞ்சம் காமி

பழமுதிர் சோலையிலே ஒருநாள் அந்தி மாலையிலே
கந்தப் பழம்பறிக்க நானும் முந்தி வழிநடந்தேன்
கந்தப் பழம்தந்து எந்தன் அன்புப்பழம் கேட்டான்
சிந்தைப் பழம்எடுத்து நானும் செலுத்தி வீடடைந்தேன்

இரவு நேரத்திலே பழநி மலையின் மீதினிலே
எத்தனை எத்தனை வண்ண விளக்குகள் கண்ணைப்பறிக்குதடி
எண்ணம் நிறையுதடி முருகன் ஏற்றம் புரியதடி
அன்றும் இன்றும் என்றும் பழநி ஆண்டி முகம் தெரியும்

-கவிஞர் மா. கண்ணப்பன்