வா வா முருகா வடிவேலா

வேல்வேல் முருகா வேல்முருகா
வேல்வேல் முருகா வேல்முருகா
வேல்வேல் முருகா வேல்முருகா
வேல்வேல் முருகா வேல்முருகா


குன்றக்குடியில் அமர்ந்தவனே
குறைகளை எல்லாம் தீர்ப்பவனே
குன்றாக்குடியாய் எமை ஆக்கி
குமரா வந்தெமைக் காப்பாயே

வள்ளி தெய்வயானையுடன்
தணிகைமலையில் அமர்ந்தவனே
துள்ளிவந்திடும் எங்களுக்கு
துணையாய் வந்து நீ இருப்பாயே

சூரனை அழித்து சினம் தணிந்து
செந்தூர்க் கடற்கரை அமர்ந்தவனே
ஷஷ்டி கவசம் படிப்பவர்க்கு
சகல கௌ பாக்கியம் அருள்பவனே

பழத்திற்கு பழனியில் அமர்ந்தவனே
பழமுதிர் சோலையை ஆள்பவனே
பாடி வந்திடும் எங்களுக்கு
பக்கத் துணையாய் இருப்பவனே

தந்தைக்கு பிரணவம் சொன்னவனே
தகப்பன் சாமி ஆனவனே
சுவாமி மலையில் வாழ்பவனே
சுவாமி நாதனே அருள்வாயே

திருமணக் கோலத்தில் இருப்பவனே
திருப்பரங்குன்றினில் வாழ்பவனே
திருமால வனின் மருகோனே
சீக்கிரம் வந்தெமைக் காப்பாயே

எட்டுக்குடியில் இருப்பவனே
எங்கள் குறைகளைத் தீர்ப்பவனே
பட்டி தொட்டியில் அமர்ந்தவர்க்கு
பக்கத்தில் அமர்ந்து அருள்பவனே

சிக்கல் நகரில் வாழ்பவனே
சிங்காரமாக இருப்பவனே
சிக்கித் தவித்திடும் எங்களையே
சீக்கிரம் வந்தே காப்பாயே

தனித்து பழனியில் இருப்பவனே
பனித்த சடையனுக்கிளையவனே
(உனை) நினைத்து வந்திடும் எங்களுக்கு
அனைத்தும் தந்தே அருள்வாயே

-கோட்டையூர் சித. சம்பந்தம்