சண்முகா வருக வருக

அரோகரா

சரவணையி லேபிறந் தாறுமுக வடிவான
சண்முகா வருக வருக!
தர்க்கமிடு சூரனை திக்கவேல் விட்டதொரு
சுவாமியே வருக வருக!
அரவணையில் மால்மருக குமரகுரு பரனெங்கள்
ஆறுமுகா ஓடிவருக!
அலைகடலின் மகரமீன் ஓடி விளையாடிய
அமரர்பதி வருக வருக!
கருவணையில் நற்சதுரமேல் நின்று நடனமிடும்
கணபதி துணைவன் வருக!
கடியை எண்ணாயிரம் சமணரை வதைத்திடும்
கந்தனே ஓடி வருக!
மருவணையில் பெண்ணாட உலகமது காக்கின்ற
வடிவேல் இலங்கு கரமும்
வாலவய தாயுனது வாழ்மயில் ஏறிநட
மாடிவரு முருகேசனே!