பொறுமைக்கும் எல்லை உண்டே

அரோகரா

சிறுவயது முதற்கொண்டே திருச்செந்தூர் முருகனை நான்
தினந்தோறும் வணங்கி வந்தேன்
இருவிழிகள் திறந்தவுடன் பழநிமலை ஆண்டியை நான்
இதயத்தில் வணங்கி வந்தேன்
பொறு மனமே பொறு அந்த அறுமுகத்தின் அருளாலே
போயொழியும் துன்பம் என்று
பொறுத்தேனே! பொறுத்தேனே! பொன்பழநி ஆண்டவனே
பொறுமைக்கும் எல்லை உண்டே
ஒருபதிலும் கூறாமல் அருள் எமக்குத் தாராமல்
ஓடினால் என்னசெய்ய
ஓயாமல் நடக்கின்றேன் தாயான பெருமானே
வழிகாட்டு நானும் உய்ய
உறவினரும் உனையன்றி உதவுதற்கு ஒருவரில்லை
ஓடிவா! பழநி வேலா!
ஓடோடி நீ வந்து உன்பாதம் தொழுவோரை
உய்விப்பாய் குழந்தை வேலா!

-கவிஞர் மா. கண்ணப்பன்