ஆறு படை முருகா


வேல் வேல் முருகா வேல்முருகா
வேல் வேல் முருகா வேல்முருகா
வேல் வேல் முருகா வேல்முருகா
வேல் வேல் முருகா வேல்முருகா


செந்தூர் கடலலை ஓரத்திலே
சிவனார் பாலன் நின்றிடவே!
கந்தா என்றே கவி பாட;
கவலையும் சற்றே தீருதைய்யா!

பாலால் தினமும் குளிக்கின்ற
பழமுதிர் சோலை முருகனையும்
நாளும் வணங்கி வழிபட்டால்
நாதன் தருவான் பணம் நமக்கே!

திருமணக் கோலத்தில் வீற்றிருக்கும்
திருப்பரங் குன்ற முருகனையும்
திருநீறுட்டு வணங்கி வந்தால்
தீரா வினையும் தீருமைய்யா!

தந்தைக்கு மந்திரம் சொன்னதனால்
தனக்கென ஓரிடம் பெற்றவனே
மந்திரம் சொல்லி உனைவணங்க
மனத்தில் வலிமையும் கூடுதைய்யா!

தங்க ரதத்தில் பவனி வரும்
தணிகை மலை முருகனையும்
சொந்தம் கூட்டி வழிபட்டால்
சொர்க்க வாழ்வும் கிடைக்குமைய்யா!

குழந்தை வடி வேலவனாய்
குன்றத்தூரில் கொலு விருக்கும்
பழனி மலை முருகனையும்
பாதம் போற்றி வணங்கிடுவோம்!

வி.ஆர்.பழனியப்பன்