இல்லம் வா முருகா
அரோகரா
கடல் தாண்டி வருவோரின் கண்ணீரைத்
துடைக்கின்றகதிர்காமனே வருக! வருக!!
தடைகளைத் தகர்த்தெறிந்து தைரியம்
தருகின்ற தங்கநிற வேலவனே வருக! வருக!!
பன்னிருவிழி கொண்டு பாவத்தைப் பொடியாக்கும்
பழநியம்பதியனே வருக! வருக!!
கண்ணீரில் மூழ்கியுன் காலடியில் கிடப்போரைக்
காப்பாற்றவே வருக! வருக!!
நின்றாடி வணங்குவோர் நிற்கதி நீக்கிட
நித்தமும் வருக! வருக!!
மன்றாடிப் பாடுவோர் மனக்கவலை போக்கிட
மயிலேறி வருக! வருக!!
ஏவல்களை இடைநிறுத்தி இன்னல்களைக்
களைகின்ற ஈராறுகையனே வருக! வருக!!
எல்லைக்குக் காவலாய் எம் இல்லத்துப்
பிள்ளையாய் இப்போதே வருக! வருக!!
வி.ஆர்.பழனியப்பன்
அரோகரா
கடல் தாண்டி வருவோரின் கண்ணீரைத்
துடைக்கின்றகதிர்காமனே வருக! வருக!!
தடைகளைத் தகர்த்தெறிந்து தைரியம்
தருகின்ற தங்கநிற வேலவனே வருக! வருக!!
பன்னிருவிழி கொண்டு பாவத்தைப் பொடியாக்கும்
பழநியம்பதியனே வருக! வருக!!
கண்ணீரில் மூழ்கியுன் காலடியில் கிடப்போரைக்
காப்பாற்றவே வருக! வருக!!
நின்றாடி வணங்குவோர் நிற்கதி நீக்கிட
நித்தமும் வருக! வருக!!
மன்றாடிப் பாடுவோர் மனக்கவலை போக்கிட
மயிலேறி வருக! வருக!!
ஏவல்களை இடைநிறுத்தி இன்னல்களைக்
களைகின்ற ஈராறுகையனே வருக! வருக!!
எல்லைக்குக் காவலாய் எம் இல்லத்துப்
பிள்ளையாய் இப்போதே வருக! வருக!!
வி.ஆர்.பழனியப்பன்