சிங்கைநகர் வாழ்கின்ற சிங்கார வேலவா

(அறுமுக வேலவா அழகுமுகம் காட்டிவா என்ற மெட்டு)

சிங்கைநகர் வாழ்கின்ற சிங்கார வேலவா
சிக்கலெல்லாம் தீர்த்துவா செல்வநலம் பெருக வா

(சிங்கைநகர்)

செட்டிமக்கள் நாங்கலெல்லாம் செந்தமிழால் அழைக்கிறோம்
செம்மைசேர் வாழ்க்கையினை வழங்கிடவே இங்கு வா
(சிங்கைநகர்)

அன்பர் எல்லாம் நோன்பிருந்து உன்னை காண வருகின்றோம்
அடியவரை காத்திடவே அன்புடனே இங்கு வா
(சிங்கைநகர்)

வேழமுகன் சோதரனே வேல் வடிவாய் நின்றவா
வேண்டுவரம் நல்கவா வளமெல்லாம் அருள வா
(சிங்கைநகர்)

அரோகரா முழக்கம் இங்கே விண்ணை பிளக்குது
அழகு காவடிகள் னந்தமாய் டி வருகுது
(சிங்கைநகர்)

உன்புகழை பாடபாட உள்ளமெல்லாம் உருகுது
உன்னருளை வேண்டி வேண்டி பிள்ளைமனம் ஏங்குது
(சிங்கைநகர்)

பக்தியாலே மனமிங்கே துள்ளிதுள்ளி டுது
பரவசத்தால் மெய்சிலிர்த்து கண்ணில் நீர் பெருகுது
(சிங்கைநகர்)

உன்னழகை கண்டவுடன் உள்ளம்தெளிவு பெருகுது
உன்நாமம் சொல்ல சொல்ல உயர்வுதானாய் வருகுது.
(சிங்கைநகர்)

லெ.சக்திகுமார்.
ஜனவரி 2008.