கந்தவேலை வணங்கு

கந்த வேலை வணங்கு
நம் கவலையெல்லாம் போக்க
கந்தவேலை வணங்கு
நம் கவலைஎல்லாம் போக்க


நாளும் பொழுதும் தீபம் ஏற்றி கந்த வேலை வணங்கு
நன்மை யாவும் வீடுசேரும் பக்தியை நீ விரும்பு
பிறப்பு என்பது ஒரு முறை அது
வேண்டாம் நமக்கும் மறுமுறை (2)
இருக்கும் வரையில் முருகன் நினைவில்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும்
நாம் வாழ்வதில் நிம்மதி உண்டாகும்

கந்தவேலை வணங்கு
நம் கவலைஎல்லாம் போக்க

உண்மை அன்பு கொண்ட நெஞ்சில் வாழுகின்ற தெய்வம்
உள்ளம் உருகி அழுபவர் தமக்கு உதவுகின்ற தெய்வம்
கருணை பொங்கும் ஒரு முகம்
அது கந்தன் குமரன் திருமுகம் (2)
இருக்கும் வரையில் முருகன் நினைவில்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும்
நாம் வாழ்வதில் நிம்மதி உண்டாகும்

தினம் கந்தவேலை வணங்கு
நம் கவலைஎல்லாம் போக்க

பாதம் நோக பயணம் போக பழனியப்பன் வருவான்
விதியை மாற்றி வினைகள் அகற்றி புதிய வாழ்வு தருவான்
ஆறெழுத்து மந்திரம்
அதைச் சொன்னால் சுகம் தரும் (2)
இருக்கும் வரையில் முருகன் நினைவில்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும்
நாம் வாழ்வதில் நிம்மதி உண்டாகும்

தினம் கந்தவேலை வணங்கு
நம் கவலைஎல்லாம் போக்க
நம்ம கந்தவேலை வணங்கு
நம் கவலைஎல்லாம் போக்க