சிங்கை வேலனே - எங்கள் பாலனே
கருணைமனம் கொண்ட எங்கள் சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
ஆடிவாரோமே உன்னைத்தேடி பாடிவாரோமே
கால்நாடையாய் உன்னடியைக் காணவாரோமே
கருணைமனம் கொண்ட எங்கள் சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
காவடியை தோளினிலே ஏந்திவருகிறோம்
கந்தாஉன் காலடியை நாடிவருகிறோம்
வேல்வடிவாய் காட்சிதரும் சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
பழனியிலே ஆண்டியாய் நிற்பவனே
பஞ்சம்பிணி அத்தனையும் தீர்ப்பவனே
தங்கமயில் ஏறிவரும் சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
பரங்குன்றில் தெய்வானையை மணந்தவனே
வளமெல்லாம் வாழ்க்கையில் தருபவனே
காவடிகள் கண்டுமகிழ் சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
செந்தூரில் சூரனை வென்றவனே
சோதனைகள் அனைத்தையும் களைபவனே
கடல்நோக்கி அமர்ந்திருக்கும் சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
பழமுதிரும் சோலையினில் வள்ளிகணவனே
பாவமெல்லாம் போக்குகின்ற பரந்தாமனே
பாருலகை காக்கின்ற சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
சுவாமிமலையில் குருவடிவாய் இருப்பவனே
ஓம்மென்ற மந்திரத்தை தந்தவனே
ஓங்காரப் பொருளான சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
தணிகையினில் கண்டுவந்தோம் மணக்கோலமே
தமிழ்கடவுள் உன்னைநாங்கள் பாடிவந்தோமே
உன்னருளால் உயர்கின்றோம் சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
சிங்கைநகர் வீற்றிருக்கும் எங்களய்யனே
செல்வநலம் தந்தெம்மை காக்கும்வேலனே
சிரம்தாழ்த்தி வணங்குகின்றோம் சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
லெட்சுமணன் சக்திகுமார்.
கருணைமனம் கொண்ட எங்கள் சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
ஆடிவாரோமே உன்னைத்தேடி பாடிவாரோமே
கால்நாடையாய் உன்னடியைக் காணவாரோமே
கருணைமனம் கொண்ட எங்கள் சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
காவடியை தோளினிலே ஏந்திவருகிறோம்
கந்தாஉன் காலடியை நாடிவருகிறோம்
வேல்வடிவாய் காட்சிதரும் சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
பழனியிலே ஆண்டியாய் நிற்பவனே
பஞ்சம்பிணி அத்தனையும் தீர்ப்பவனே
தங்கமயில் ஏறிவரும் சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
பரங்குன்றில் தெய்வானையை மணந்தவனே
வளமெல்லாம் வாழ்க்கையில் தருபவனே
காவடிகள் கண்டுமகிழ் சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
செந்தூரில் சூரனை வென்றவனே
சோதனைகள் அனைத்தையும் களைபவனே
கடல்நோக்கி அமர்ந்திருக்கும் சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
பழமுதிரும் சோலையினில் வள்ளிகணவனே
பாவமெல்லாம் போக்குகின்ற பரந்தாமனே
பாருலகை காக்கின்ற சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
சுவாமிமலையில் குருவடிவாய் இருப்பவனே
ஓம்மென்ற மந்திரத்தை தந்தவனே
ஓங்காரப் பொருளான சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
தணிகையினில் கண்டுவந்தோம் மணக்கோலமே
தமிழ்கடவுள் உன்னைநாங்கள் பாடிவந்தோமே
உன்னருளால் உயர்கின்றோம் சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
சிங்கைநகர் வீற்றிருக்கும் எங்களய்யனே
செல்வநலம் தந்தெம்மை காக்கும்வேலனே
சிரம்தாழ்த்தி வணங்குகின்றோம் சிங்கைவேலனே
அருள்புரிய வேண்டுமய்யா எங்கள்பாலனே.
லெட்சுமணன் சக்திகுமார்.