குன்றுதோர் ஆடிவரும் குமரனுட வேலுயிது
கூடிவரும் பக்தர்களின் குறைதீர்க்கும் வேலுயிது

குன்றுதோர் ஆடிவரும் குமரனுட வேலுயிது
கூடிவரும் பக்தர்களின் குறைதீர்க்கும் வேலுயிது

மன்றம் விளங்கவரும் மன்னனுட வேலுயிது
குன்றக்குடி தனிலே குடியிருக்கும் வேலுயிது

பழனி மலைநோக்கி பறந்துவரும் வேலுயிது
கழனியிலே நிற்பவரின் கண்துடைக்கும் வேலுயிது
தண்டனைகள் அகற்றிவிடும் தண்டபாணி வேலுயிது

பழனி மலைநோக்கி பறந்துவரும் வேலுயிது
கழனியிலே நிற்பவரின் கண்துடைக்கும் வேலுயிது

வையா புரிஓரம் வந்துநிற்கும் வேலுயிது
வாழ்வாங்கு வாழவைக்கும் வடிவேலன் வேலுயிது

ஆடிவரும் காவடியில் அமர்ந்துவரும் வேலுயிது
அம்மையுட கையிருந்து ஆண்டியிடம் வந்ததிது

எட்டுக்குடிநகர்க்கு எழுந்தருளும் வேலுயிது
கட்டிவரும் காவடியில் காட்சிதரும் வேலுயிது

ஆறுகால் சவுக்கையிலே ஆடிநிற்கும் வேலுயிது
ஆறுமுகன் கையிருந்து அருள்பொழியும் வேலுயிது

குன்றுதோர் ஆடிவரும் குமரனுட வேலுயிது
கூடிவரும் பக்தர்களின் குறைதீர்க்கும் வேலுயிது

மையூரநாதனவன் மனங்கவரும் வேலுயிது
மன்றம் விளங்கவரும் மன்னனுட வேலுயிது

குன்றுதோர் ஆடிவரும் குமரனுட வேலுயிது
கூடிவரும் பக்தர்களின் குறைதீர்க்கும் வேலுயிது

Singer : Somasundaram L, Bangalore

--
Digital Eye,
S Saravanan