காருற்றதென்பரங் குன்றமதில் விளையாடும்
கருணையா னந்தகுருவே
காரணம தானபா¢ பூரணக்ரு பாகரா
கடல்வண்ண னுக்குமருகா
கமலத்தல் வந்தவய னைச்சிறையில் வைத்தவா
கமழ்பழனி யம்பதியனே
கயலொத்த விழிமா தென்னுங்குறப் பெண்ணுக்குக்
கான்வேங்கை மரமானவா

கதியான பொதிகைவரை தனிலுறையு மிருடிக்கு
கலையேற் றியபண்டிதா
கங்கா தரன் செவியில் ஓங்கார பிரணவம்
கற்பித்தல் சாமிநாதா
கன்னல்வில் லிக்கருமை மைத்துனா சமணரைக்
கழுமுனையில் விட்ட குமரா
கண்ணா யிரம்பெற்ற அண்மர்கோ னுக்குவரும்
கலியகற் றியதெய்வமே

சீருற்ற நின்மகிமை தெண்டனிட்ட டியவர்கள்
செப்புவிண் ணப்பமதுகோள்
செய்வினை கொண்டதாற் கருவிலுருவாகிய
சென்மித்து வந்தபின்
சிசுவென்று முலையுண்டு பதினாறு வயதினிற்
செந்தமிழ்க் கலைபடித்துன்
செகமீதின் மெய்ஞ்ஞான தெய்வமே யுன்றனைத்
தேடிவந் தேனடுத்தும்

தேனுற்ற தாமரைச் சரவணப் பொய்கைதனில்
தீர்த்தமதுதா னாடியும்
சிங்கார மாகளவர் கி¡¢யைவல மாவந்து
சிந்தையின் துயரமெல்லாம்
செப்பியுங் கேளா திருப்பதே னோவுனது
சிந்தையி லிரக்கமில்லையோ
திரமாக வுன்றந்தை மார்கண்ட னுக்காக
சிரஞ்சீவி கொடுக்க வில்லையோ

ஏருற்ற பன்னிரு புயத்தனே தெந்தினம்
செய்தென்னை யேக்கிறாயோ
இதுவென்ன கலியுகக் கொடுமையோ வுனையன்றி
யின்னமொர தெய்வமுண்டோ
ஏதாயி னுஞ்சற் றிரங்காத நெஞ்சமோ
என்மீதில் என்ன வாதா
இன்பமிகு கும்பமுலை மங்கைய ¡¢டந்தனி
லிணங்கவே வைத்தநினைவா

ஈராறு காதுக்கு ளேழைநான் சொன்னமொழி
எள்ளளவும் கேட்க விலையோ
எண்டிசையு மண்டபகி ரண்டமு முன்றனரு
ளில்லால் நிலை நிற்குமோ
இடையுடை நிகழ்ந்திடி லிருக்கை முபசார
மேவரா கிலுஞ் சொல்வரோ
ஏழைக் கிரங்குமுரு கேசனென் றுன்னையே
இவ்வுலகெ லாஞ்சொல்லுதே

மேருற்ற புயசுரன் மார்பைத் தொளைத்திட
வேல்தொட்ட ரணசூரணே
வித்தா கடம்பா அத்திமுக னுக்கிளையா
வித்தாக சக்திபுதல்வா
வேலைக்கு ளேமகர மீனாக வந்தன்று
விளையாடி நின்றபரனே
விந்தையுட னேசைவமந்திரம் விளங்கவே
விபூதியணி சம்பந்தனே

மேதினில் ஆதாரம் உன்றருளிய பாதாரம்
மெய்யன்றி வேறில்லையே
வேண்டிய வரந்தந்து தொண்டரைக் காத்தருள
வேளையிது நல்லசமயம்
வெள்ளுரை திருப்புகழ் அருணகி¡¢ மகிழவே
விளையாடு மயில்வாகனா
விஞ்சமுனி வோர்கள்தொழு மஞ்சலென் றருள்பு¡¢யும்
வேலா யுதக்கடவுளே.

எத்தனை கவியமுதம் பாடியும் தேடியும்
இரங்காத வாறும் ஏது
ஏழைக்கு இரங்குவது சரவணப் பெருமாள்
இருக்கிறார் என்று உரையும்
சித்தர் முதல் வாக்கியம் கூறியது பொய்யோ
சிவ சுப்பிரமணிய நாதா
தென்பொதிகை மாமுனிக்கு உபதேசம் அன்றுநீ
செப்பியதும் யான் அறிகுவேன்.

முத்தனே முதல்வனே முடியனே அடியேனை
முன்னின்று காக்க வாவா
முச்சுடருக்கு உ¡¢ய திருநாதனே வேதனே
முப்புராதி அன்பர் குருவே
சப்தா¢ஷிமாதவா தாதவா கீதவா
தமிழ்நாடும் வாக்கு முதலே
தரணிதனில் மயில் மீதில் விளையாடி வருகின்ற
சண்முகக் குமர குருவே.

ஈராறு காதிலே யான்சொன்ன மொழியிலே
எள்ளளவும் கேட்க வில்லையோ
இக்கலியுகத்திலே பற்பல கி¡¢யிலே
என்னென்ன புதுமை செய்தாய்
பாரதனிற் பொ¢ய மெய்ஞான பண்டதா
பன்னிரு கண்ணில்லையோ
பாவையர்க்ள மோகமாய் அருணகி¡¢ செந்தமிழ்
பாட்¦ன்மேல் நினைவுற்றவா

தீரனே பொற்கடகம் அணியும் அணிமார்பனே
தேவர்பணி பொற்பாதனே
செட்டிமகனே தங்கக்கட்டிமணியே இந்தத்
தந்திரம் செய்யலாமா
திராகெம் பீரா ஒய்யாரா செந்தூரா செஞ்
சேவற் கொடிக்கதிபா
செம்பொன் அம்பல சீலசண்முகம் அருள்பாட
தென் பரங்கி¡¢ வேலனே.