ஓம் முருகா சரணம்!
அன்புடையீர்
வணக்கம். அழகன் முருகனின் அருள்வேண்டுவோர் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் 2006 ஆம் ஆண்டு 150 பாடல்களோடு நிறுவப்பட்ட இந்த பஜனை.காம் இணையத்தளம் இன்று உலகெங்கிலும் உள்ள முருகபக்தர்களின் பேராதரவோடு பெருகி வளர்ந்து மறுசீரமைப்பு பெற்று புதுப்பொலிவோடும் புதுவடிவோடும் கிட்டதட்ட 400க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுத்து வடிவாகவும், செவிகளுக்கு விருந்தாகும் MP3 பாடல் வடிவாவகவும் இடம்பெற்றுள்ள ஒரு ப்ரமாண்ட இணையத்தளமாக உருவெடுத்துள்ளது. இதற்காக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
கால்நடையாய் வரும் மானிட ஜாதியை கண்டுகளிக்கும் கந்தனுக்கு ஆனந்தப் பாடல்களை அனுதினமும் பாடிப் பரவசம் கொள்ளும் உன்னத நோக்கோடு உருவாக்கப்பட்ட இந்தஇணையத்தளத்தை இனி அலைபேசி செயலி வழியாகவும் பயன்படுத்தும் விதமாகவும் தயார் செய்யப்பட்டுள்ளது என்பதை மட்டற்ற மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்
ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா, லண்டன், கனடா, மரூஷியஸ், ஆஸ்திரேலியா உட்படஉலகெங்கிலும் உள்ள நாடுகளில் வெகு விமரிசையாக நடைபெறுகின்ற இன்றைய காலகட்டத்தில் யானைமுகனுக்கு இளையவனை இணையம் மூலம் இன்பமோடு கும்பிட உதவும் இந்தத் தளத்தினை என்றென்றும் போற்றி பாதுகாத்திட வேண்டும் என்பதே எங்கள் அவா. அனைவரின் உதவியோடும் ஆதரவோடும் இத்தளம் ஆலமரம் போல என்றும் தழைத்துச்செழித்தோங்க செந்திலாண்டவன் துணை வேண்டி ப்ரார்த்திக்கிறோம்
இவ்விணயதளத்தின் ஒரே குறிக்கோள், எந்த வியாபார நோக்கமும் இல்லாமல், உலகெங்கும் உள்ள அனைத்து முருக பக்தர்களையும் ஒருங்கிணைத்து அவன் பெருமைகளை வாயாறப் பாடி அவனருள் பெருவதே ஆகும். முடிந்தவரை அச்சுப்பிழைகள் ஏதுமின்றி பாடல்களை பதிவேற்ற முயன்றிருக்கிறோம். தவறுகள் இருப்பின் தயைகூர்ந்து பின்னூட்டம் தந்து உதவுங்கள். தளத்தின் நிறைகளையும் இத்தளத்தின் பாடல்கள் தரும் மனநிறைவினையும் தங்கள் உற்றார் மற்றும் நட்புக்களோடு பகிர்ந்து மகிழுங்கள்.
செட்டி முருகனை வணங்கி இத்தளத்தை அவன் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறோம்.
நன்றி..வணக்கம்
பஜனை.காம் இணையக்குழு
14-01-2020