ஷண்முக குரு நாதனே


ஷண்முக குரு நாதனே
ஷண்முக குரு நாதனே
குன்றக்குடி மலைதனிலே காட்சிதர வேணுமே


ஷண்முக குரு நாதனே
ஷண்முக குரு நாதனே
குன்றக்குடி மலைதனிலே காட்சிதர வேணுமே

ஷண்முக குரு நாதனே
ஷண்முக குரு நாதனே
எங்கள் வினை தீர்த்திடவே கண்திறக்க வேணுமே

வள்ளி தெய்வயானையுடன் ஷண்முக குரு நாதனே
பால் நிலவாய் குன்றக்குடியில் காட்சிதர வேணுமே
உன்னை எந்த நாளுமே என் சந்ததிகள் பாடவே
குன்றக்குடி மலைதனிலே காட்சிதர வேணுமே

ஷண்முக குரு நாதனே
ஷண்முக குரு நாதனே
குன்றக்குடி மலைதனிலே காட்சிதர வேணுமே

தண்டையணி வேண்டயன் கிண்கிணி சதங்கையும்
அருணகிரி பாடியதை நானும் பாட வேணுமே
செந்திலில் நீ ஆடியதை நானும் காண வேணுமே
குன்றக்குடி மலைதனிலே நீ வேலெடுத்து ஆடுமே.

ஷண்முக குரு நாதனே
ஷண்முக குரு நாதனே
குன்றக்குடி மலைதனிலே நீ வேலெடுத்து ஆடுமே.

வெங்கட் கணேசன்.- நாச்சியாபுரம்