பாலும் தேன் அபிஷேகமும்

பாலும் தேன் அபிஷேகமும்
பக்தர்களின் காவடியும்
பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம்
பரந்தநீ தேவனாகி
சின்ன சின்ன முருகா முருகா
சிங்கார முருகா

செந்தூர் கடற்கரையில்
தேவர்களை காக்க வேண்டி
பார்ப்பவர்கள் மனம் மகிழ
சூரனை சம்ஹாரம் செய்தாய்
(சின்ன சின்ன முருகா)

ஆண்டவனே அலங்காரானே
அண்டமெல்லாம் வலமும் வந்தாய்
அடியார்கள் காணும்போதூ
ஆண்டியாய் நீ காட்சி தந்தாய்
(சின்ன சின்ன முருகா)

அப்பனுக்கு உபதேசித்தாய்-என்
அருமை குருநாதணுமாய்
ஸ்வாமி மலையில் அமர்ந்தவனே
சுவாமினாதா குருவே அப்பா
(சின்ன சின்ன முருகா)

சேனைக்கு அதிபதியாய்
தேவசேனைக்கு அதிபதியாய்
தேவர்களை காத்திடவே
திருத்தணி மலைதனிலே
திருமணக் கோலம் கொண்டாய்
(சின்ன சின்ன முருகா)


முக்திக்கு வழி தேடியே
முதியோரும் இளைஞர்களும்
மலைகளெல்லாம் ஏறி வந்தோம்
மாதவன் மறுகனே நீ வா
(சின்ன சின்ன முருகா)


சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
ஆ சின்ன ஓ சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
ஆ சின்ன ஓ சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா