அஞ்சன வேல்விழி மடமாதர் (தஞ்சை)

அஞ்சன வேல்விழி ...... மடமாதர்
அங்கவர் மாயையி ...... லலைவேனோ
விஞ்சுறு மாவுன ...... தடிசேர
விம்பம தாயரு ...... ளருளாதோ
நஞ்சமு தாவுணு ...... மரனார்தம்
நல்கும ராவுமை ...... யருள்பாலா
தஞ்சென வாமடி ...... யவர்வாழத்
தஞ்சையில் மேவிய ...... பெருமாளே.