அண்ணன் வாரார் தம்பி வாரார்
காயம்பு நீல மேக வண்ணன் வாரார்


கச்சைமணி சலங்கை கலகலவென்றே ஒலிக்க
ஈட்டி சமுதாடு பளபளவென மின்னவே
வாள் எடுத்து கச்சைகட்டி வாகன குதிரைதனில்
சத்தியமாய் பாராளும் மன்னரெலாம் போற்றி நிற்க
பார் ஓங்கும் பதினெட்டாம் படிக்கருப்பர்
கூர் அரிவாள் மீதேறி நின்று விளையாடுவதற்கு
தேசத்து நியாயமெல்லாம் தீர்பதற்கு துடிக்கருப்பர்
வம்பு செய்யும் கள்ளப் பிசாசுகளை ஒட்டி வைக்க
வள்ளலைப் போல் தந்துதவி ஏழைகள் எங்களை ஆதரிக்க
சேமம் குதிரைதனில் வேகவேகமாய் ஓடிவாரார்!!!