ஆதரிப்பாய் கணபதியே

அருகம்புல்லை அள்ளி ஆனைமுகன் உனக்களிக்க
பெருகும் பொன்னை அள்ளி பெருமையுடன் தருபவனே
உருகி மனம் உருகி உனைத்தொழுது போற்றுகிறேன்
அருகில் வந்து எம்மை ஆதரிப்பாய் கணபதியே