ஆனந்தம் ஆனந்தமே

ஆனந்தம் ஆனந்தமே முருகா ஆனந்தம் ஆனந்தமே
முருகா ஆனந்தம் ஆனந்தமே முருகா ஆனந்தம் ஆனந்தமேஅலங்கார மண்டபத்தில் மணியோசை கேட்குது ஆனந்தம் ஆனந்தமே
அந்த மணியோசை கேட்டதும் மயில் ஒன்று ஆடுது ஆனந்தம் ஆனந்தமே

மயிலாட்டம் காணவே வடிவேலன் வருகிறான் ஆனந்தம் ஆனந்தமே
அந்த வடிவேலன் துணையோடு வாழ்கின்ற நமக்கென்றும் ஆனந்தம் ஆனந்தமே

அலையாடும் செந்தூரில் விளையாடி நிற்பதும் ஆனந்தம் ஆனந்தமே
நீ அற்புத பழனியில் கோலூன்றி நிற்பதும் ஆனந்தம் ஆனந்தமே

பழமுதிற்சோலையில் மரமாகி நின்றதும் ஆனந்தம் ஆனந்தமே
நீ பரங்குன்றில் தெய்வானை கரம்பற்றி நிற்பதும் ஆனந்தம் ஆனந்தமே

சுவாமிமலை உலகப்பன் தோளிலே அமர்ந்ததும் ஆனந்தம் ஆனந்தமே
சுந்தரத் திருத்தணிகை திருமணக் கோலமும் ஆனந்தம் ஆனந்தமே

செம்மடைப்பட்டியில் புதியதோர் மண்டபம் ஆனந்தம் ஆனந்தமே
அங்கு சிங்கார ஊஞ்சலில் உன்னையே காண்பதும் ஆனந்தம் ஆனந்தமே

வண்டாடும் மலர்ச்சோலை கண்டாலும் உனக்குமே ஆனந்தம் ஆனந்தமே
அங்கு வடிவேலும் மயிலுமே ஆடிடக் கண்டிட ஆனந்தம் ஆனந்தமே

கண்டனூர் சாமியாடி கைபட்ட திருநீறும் ஆனந்தம் ஆனந்தமே
அது வந்தவினை போக்குதே வள்ளலே உன்பெருமை ஆனந்தம் ஆனந்தமே

ஆடிவரும் காவடியில் அழகுமுகம் தெரிவதும் ஆனந்தம் ஆனந்தமே
அந்த ஆடிவரும் காவடிக்கு வேலும் ஒரு துணையாகும் ஆனந்தம் ஆனந்தமே

ஊஞ்சலில் ஆடிடும் உன் அழகு கண்டிட ஆனந்தம் ஆனந்தமே
அந்த ஒய்யார சிரிப்பிலே என்னை நான் மறப்பதும் ஆனந்தம் ஆனந்தமே

பாலாறு தேனாறு பழனிமலை ஓடுது ஆனந்தம் ஆனந்தமே
அங்கு பஞ்சாமிருத குளியலில் உன்னை காண்பதும் ஆனந்தம் ஆனந்தமே

தென்பழனி மலைமீது தங்கரதம் பவனிவர ஆனந்தம் ஆனந்தமே
அதில் சிங்கார வேலுடன் உன்னையே காண்பதும் ஆனந்தம் ஆனந்தமே

ஆறுகால் சவுக்கையில் அய்யா உன் ஆட்டங்கள் ஆனந்தம் ஆனந்தமே
நான் நூறு வயதானாலும் ஓடிவர மாட்டேனோ ஆனந்தம் ஆனந்தமே

கோடான கோடி மக்கள் தேடியே வருகிறார் ஆனந்தம் ஆனந்தமே
நம்ம கொடை வள்ளல் முருகனுக்கு அரோகரா என்றால் ஆனந்தம் ஆனந்தமே

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா , தெண்டபாணித் தெய்வத்துக்கு அரோகரா, அள்ளித்தரும் வேலனுக்கு அரோகரா , சிங்கை வடிவேலனுக்கு அரோகரா , என்று

கோடான கோடி மக்கள் தேடியே வருகிறார் ஆனந்தம் ஆனந்தமே
நம்ம கொடை வள்ளல் முருகனுக்கு அரோகரா என்றால் ஆனந்தம் ஆனந்தமே

அருளிசைமணி நேமத்தான்பட்டி அரு.சுப்பிரமணியன்.