ஆலயத்தை சுற்றிவந்தால் அருள்கிடைக்குமடி
அம்மாஉன் கண்பார்த்தால் பொருள்கிடைக்குமடி

தீராத வினைகளெல்லாம் தீர்த்துவைப்பவளே
மாறாத மனத்துயரை மாற்றிவைப்பவளே (ஆலயத்தை சுற்றிவந்தால்)

ஏழுலகை ஆளுகின்ற ஈஸ்வரிதாயே
எங்கள்குலம் வாழவைக்கும் தெய்வமும் நீயே

தேவாதி தேவிஉன்னை தேடிவருகிறோம்
திருவருளை வேண்டுமென்று கேட்க வருகிறோம் (ஆலயத்தை சுற்றிவந்தால்)

பூமியாக உருவெடுத்து பொருத்திருப்பவளே
பொங்கும்கடலை ஆடையாக உடுத்திருப்பவளே

சந்திரனும் சூரியனும் உன்னிருகண்கள்
சங்கரிஉன் ஆபரணம் நான்குவேதங்கள் (ஆலயத்தை சுற்றிவந்தால்)


அர்த்தனாரியாயிருந்து அருள் புரிபவளே
அண்டிவரும் பக்தருக்கு வாழ்வளிப்பவளே

ஸ்ரீசக்ர பீடமதில் வீற்றிருப்பவளே
சிவபெருமான் சக்தியாக வடிவெடுத்தவளே (ஆலயத்தை சுற்றிவந்தால்)


Singer : Somasundaram L, Bangalore