இலக்குமி வணக்கம்

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!


செந்தாமரை மலரில் திகழ்கின்றவள்
ஸ்ரீரங்க நாதனோடு மகிழ்கின்றவள்
சந்தான சௌபாக்கியம் தருகின்றவள்
தட்டாமல் ஓடோடி வருகின்றவள்

வற்றாது பால் வழங்கும் பசுவானவள்
மடிமீது உறவாடும் சிசுவானவள்
கற்றார்க்கும் கல்லார்க்கும் உயிரானவள்
கண் போகும் இடமெங்கும் பயிரானவள்

நன்செய்யும் புன்செய்யும் தானானவள்
நவதான்யப் புலம் எங்கும் மானானவள்
பொன் செய்யும் வேளாளர் கரமானவள்
புவியோரை வாழ்விக்கும் வரமானவள்

-கு.செ.ராமசாமி, சிவகங்கை