சபரிமலையில் வண்ண சந்ரோதயம்

சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம்-தர்ம
சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம்
கோடிக்கண் தேடி வரும் ஐயப்பனை நாமும்
கும்பிட்டுப் பாடுகிறோம் என்னப்பனை
பாலெனச் சொல்லுவது உடலாகும் அதில்
தயிரெனக் கொண்டதெங்கள் மனமாகும்
வெண்ணெய் திரண்டதுஉந்தன் அருளாகும்-இந்த
நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும்
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா-இந்த
ஏழுலகம் உந்தன் கட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா-நீ தான் மெய்யப்பா
ஐயப்பா-நீ தான் மெய்யப்பா