சமயபுரம் மாரியம்மன்

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!


இமயத்தில் பிறந்தாலும் இதயத்தில் வாழ்கின்ற
இணையற்ற தாயமுதமே
இல்லாமை இல்லாமல் எல்லோரும் வாழ்ந்திட
எழுந்தருளும் அருளமுதமே

சமயத்தில் வரும் இன்னல் தகர்த்திடும் அன்னையே
சமயபுரம் மாரியம்மா
சஞ்சலம்நீங்கிடச் செஞ்சுடர் காட்டிடும்
சக்தியே தேவியம்மா

உமையவளின் மறுவுருவாய் உலகத்தைக் காக்கின்ற
ஓங்காரவல்லி நீயே
உன்அருளில் பிள்ளைகள் உயர்வோடு வாழ்ந்திட
உற்றவழி சொல்லுவாயே

அமைந்திட்ட வாழ்க்கையையும் சக்கரமாய் சுற்றிட
ஆறுதல் செப்புவாயே
ஆறுதல் கூறியே மாறுதல் தருகின்ற
அம்மையே! மாரியுமையே!