சிங்கப்பூர் லயன்சித்தி கணபதி

கணபதியே எங்கள் கணபதியே
சிங்கப்பூர் லயன்சித்தி கணபதியே!
கணபதியே எங்கள் கணபதியே
சிங்கப்பூர் லயன்சித்தி கணபதியே!


கணபதியே எங்கள் கணபதியே
சிங்கப்பூர் லயன்சித்தி கணபதியே
கவலைகளைத் தீர்த்தருளும் கணபதியே
வரங்கள்பலத் தந்தருளும் கணபதியே

மூஷிக வாகனப் பெருமானே
முத்தான மூவுருவம் கொண்டவனே
தேனமுதத் தமிழால் தினமுன்னையே
வணங்கி மகிழ்வோம் ஆனைமுகனே

சீனரையும் கவர்ந்திட்ட உன்னாலயம்
இன்னல்கள் தீர்த்திடுமோர் கைலாயம்
உன்ஆலய வலம்வரும் அனைவருக்கும்
உன்னருளால் வாழ்வென்றும் இனிதாகும்

ஆலயம் சிறிதே ஆனாலும்
உன்புகழ் சிங்கையில் ஓங்கிநிற்கும்
உன்சன்னதியில் உடைபடும் தேங்காயும்
உன்அற்புத சக்தியின் புகழ்பாடும்

சிங்கையில் தைப்பூசத் திருவிழாவை
துவங்கிவைத்து நீ மகிழ்வாய்
காவடிப் பிள்ளைகள் அனைவருக்கும்
திடமும்பலமும் நீ அருள்வாய்

வேலாக நிற்கும் உன்தமையன்
உன்திருவடி போற்றிப் புறப்படுவான்
வெள்ளி இரதத்தின் மீதமர்ந்து
அழகான சிங்கையை வலம்வருவான்

உன்னருள் பெற்று உவகையுடன்
இரதத்துடன் காவடிகள் பவனிவரும்
காண்பவர் கண்களும் பனித்துவிடும்
பக்தியில் அவர்மெய் சிலிர்த்துவிடும்

தினமுன் கருணையால் துயிழெழுந்தோம்
எதிலும் முதலில் உனைத்தொழுதோம்
உன்னருளாலே தான் உயர்ந்தோம்
உன்புகழ் பாடி தாள்பணிந்தோம்

வெ.இராகவன், பாகனேரி.