சிங்காராமாய் அசைந்து வரும் ரதத்தை பாருங்க

சிங்காராமாய் அசைந்து வரும் ரதத்தை பாருங்க - அதில் சிட்டுபோல நிற்கும் எங்கள் முருகன் காணுங்க சிரித்து சிரித்து மயக்குகின்ற வேலன் அவனுங்க - அவன் சிங்கப்பூரில் கோவில்கொண்ட முருகன் தானுங்க

புசத்தன்று பவனிவரும் ரதத்தை பாருங்க - அதில் புன்னககைக்கும் தெண்டபாணி தெய்வம் காணுங்க
நம்மையெல்லாம் இரட்சித்து அருளும் வேலன் அவனுங்க - அவன்
சிங்கப்பூரில் கோவில்கொண்ட முருகன் தானுங்க

ஆடிவரும் காவடிகள் அழகை பாருங்க - அதை
எந்திவரும் செட்டிமக்கள் மகிழ்ச்சி காணுங்க அழகுதமிழ் பாடல் கேட்கும் வேலன் அவனுங்க - அவன் சிங்கப்பூரில் கோவில்கொண்ட முருகன் தானுங்க

வருடம் முழுதும் விழாக்கொண்ட கந்தன் அவனுங்க - வந்து வணங்குகின்ற பக்தர் வம்சம் காக்கும் வேலன்ங்க வளமான வாழ்வு நல்கும் வள்ளல் அவனுங்க - அவன் சிங்கப்பூரில் கோவில்கொண்ட முருகன் தானுங்க

அருகிருந்து காத்துநிற்கும் அழகு முருகன்ங்க - நம்ம அசுரப்பய சேட்டையெல்லாம் அடக்கி வைப்பாங்க
அன்புகொண்ட பக்தரை வழிநடத்தும் வேலன் அவனுங்க - அவன்
சிங்கப்பூரில் கோவில்கொண்ட முருகன் தானுங்க
லெ. சக்திகுமார். தேவகோட்டை