சிவசிவாய சிவசிவாய சிவசிவாய மந்திரம்


சிவசிவாய சிவசிவாய சிவசிவாய மந்திரம்
சிவனின் நாமம் சொல்பவர்க்கோர் சிந்தையெல்லாம் குளிர்ந்திடும்


கணபதியின் தந்தை நாமம் சிவசிவாய மந்திரம்
கந்தனையும் பெற்ற நாமம் சிவசிவாய மந்திரம்
(சிவசிவாய)
கையிலிலே ஒலிக்கும் நாமம் சிவசிவாய மந்திரம்
கவலையினை போக்கும் அந்த சிவசிவாய மந்திரம்
(சிவசிவாய)
அம்மையப்பன் பெயர் ஒலிக்கும் சிவசிவாய மந்திரம்
அன்பு உள்ளம் வரவழைக்கும் சிவசிவாய மந்திரம்
(சிவசிவாய)
சொர்ணலிங்கம் ஆனவன்பேர் சொல்லும் நாமம் மந்திரம்
ஜோதிலிங்கம் ஆனவன்பேர் சொல்லும் நாமம் மந்திரம்
(சிவசிவாய)
அர்த்தநாரிஈஸ்வரனை சொல்லும் நாமம் மந்திரம்
அனைவருக்கும் அருள்கிடைக்க சொல்லும் நாமம் மந்திரம்
(சிவசிவாய)
அருணாசலம் ஆனவன்பேர் சொல்லும் நாமம் மந்திரம்
அண்ணாமலை ஜோதியாகி அருள்வழங்கும் மந்திரம்
(சிவசிவாய)
பட்டினத்தார் சொல்லியதும் சிவசிவாய மந்திரம்
பக்தர்களைக் காக்கும் அந்த சிவசிவாய மந்திரம்
(சிவசிவாய)
சொக்கலிங்கம் ஆனவன்பேர் சொல்லும்நாமம் மந்திரம்
சுகமனைத்தும் கொடுப்பதற்கு சொல்லும்நாமம் மந்திரம்
(சிவசிவாய)