தங்கமுத்துப் பழனியப்பன்

சிங்கார சிங்கையிலே
சீமானாம் பழனியப்பன்
செட்டியார்கள் கொண்டு வந்த
செல்வ முத்துப் பழனியப்பன்


தைப்பூசம் கண்டு வரும்
தங்க முத்து பழனியப்பன்
தரணியெல்லாம் புகழ் மணக்கும்
தனிகைமலை வாசனவன்

மாரியம்மன் பூசையுடன்
மாமனின் துனை கொண்டு
மக்களெல்லாம் தூக்கிடுவார்
மயில் தோகைக் காவடிகள்

நவரத்தின நகையணிந்து
நவராத்திரி திருநாளில்
நவரசமாய் காட்சி தரும்
நல்ல முத்து பழனியப்பன்

கப்பலிலே பயணம் செய்து
கடல் கடந்து இங்கு வந்து
கந்தனாய் அருள் கிடுக்கும்
கட்டிமுத்துப் பழனியப்பன்

வெள்ளிரதம் விரைந்துவர
வேலுமே தொடரந்து வர
விதவிதமாய்க் காவடிகள்
வேகமாய் வருகுதப்பா

பாற்குடங்கள் ஆயிரமாம்
பரவசமாய் பொங்கி வர
காவடிகள் கோடியம்மா
கண்கொள்ளா காட்சியம்மா

மீனட்சி அருகிருக்க
சோமனுமே துனையிருக்க
இடுமபனுமே அடுத்திருக்க - எடுப்பாக
காட்சிதரும் செல்வமுத்து பழனியப்பன்

கந்தனவன் அருளவேண்டி
கவலையுடன் வருவோர்க்கு
தண்டுடனே அருள் கொடுக்கும்
தெண்டபாணி தெய்வமபா

டாங்ரோடுக் கோயிலையே
நாடிவரும் பக்தருக்கு
நலம் அனைத்தும் நல்கிடுவான்
நல்ல முத்து பழனியப்பன்.